Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோபத்தால் எல்லா செல்வங்களையும் இழக்கும் அந்த ராசிக்காரர்கள் நீங்க தானா..? வார ராசிபலன் (21.08.2022 – 27.08.2022)

Gowthami Subramani August 18, 2022 & 18:00 [IST]
கோபத்தால் எல்லா செல்வங்களையும் இழக்கும் அந்த ராசிக்காரர்கள் நீங்க தானா..? வார ராசிபலன் (21.08.2022 – 27.08.2022)Representative Image.

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான வார ராசிபலனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இந்த வார காலநிலையில், மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரையிலான ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க போகிறார்கள் என்பதைப் பற்றி காணலாம்.

மேஷம்

இலக்கை வைத்து அதை அடைய வேண்டும் நோக்கத்தோடு செயல்படும் மேஷ ராசி நேயர்களே….! இந்த வாரத்தில் நான்காம் வீட்டில் சுக்ர பகவான் அமைய பெற்று இருப்பதால், எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய காரியத்தை அடைந்தே தீர்வீர்கள். நீண்ட நாள்களாக இருக்கும் பொருளாதார நெருக்கடி குறைந்து வளர்ச்சி அடைவீர்கள்.

உத்யோகத்தில் சிறப்பாக விளங்குவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி ஈட்டுவீர்கள். பயணங்கள் மூலமாக நல்ல வளமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான அனுகூலம் கிடைக்கும். கோவத்தைக் குறைத்துக் கொண்டால், வளமான சாதனைகளைப் பெற முடியும்.

சாதகமான நாள்கள்: 22, 23

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன் வழிபாடு மற்றும் தட்சிணா மூர்த்தி நெய் தீபம் ஏற்றுவது சிறப்பான வழிபாட்டைத் தரும்.

ரிஷபம்

உங்களுக்குக் கெடுதல் நினைப்பவர்களுக்கு நன்மையே நடக்க வேண்டும் என நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே..! இந்த வாரம் உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடிக்க வேண்டிய காரியங்கள் சற்று தாமதம் ஆகலாம்.

எல்லா விஷயத்திலும் சற்று பொறுமையுடனும், நிதானத்துடனும் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது நல்லது. முக்கியமாக இந்த வாரத்தில் நீங்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும். இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

சாதகமான நாள்கள்: 21, 24, 25, 26

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் மற்றும் முருகன் வழிபாடு

மிதுனம்

எல்லோரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி நேயர்களே..! இந்த வாரம் உங்க ராசிக்கு 3 ஆம் வீட்டில் புதன் இருப்பதால், லாபகரமான வாரமாக அமையும். பொருளாதார ரீதியாக நல்ல வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். வீண் வாக்குவாதங்கள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளமான வளர்ச்சி உண்டு. நல்ல நட்பு உங்களுக்குக் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: 22, 23 மற்றும் 27

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன் மற்றும் அஷ்டலட்சுமி வழிபாடு

கடகம்

விடாமுயற்சியால் வெற்றியை ஈட்டும் கடக ராசி நேயர்களே..! ஜென்ம ராசியில் சுக்கிரனும், லாப ஸ்தானத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பலமும், வலிமையும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் நேரம்..

நண்பர்கள் மூலமாக நல்ல வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கிடைக்கப்பெறும் நாளாக அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைப்பதற்கான யோகம் உண்டு.

சாதகமான நாள்கள்: 21, 24, 25, மற்றும் 26

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் தலங்களுக்கு செல்லுதல், உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல் மிகச் சிறப்பு

சிம்மம்

எந்த ஒரு கடினமான காரியத்தையும், சுலபமாக மாற்ற முயற்சிக்கும் சிம்ம ராசி நேயர்களே..! இந்த வாரத்தில் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், எஹிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கோவப்படாமல், எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்திலும், எதிர் நீச்சல் போட்டாவது வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு உங்களுக்குப் பலன் கிட்டும்.

இது வரை இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகி, தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சிகரமான செய்தியைப் பெறுவீர்கள்.

சாதகமான நாள்கள்: 22,23 மற்றும் 27

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுதல் மற்றும் மகாவிஷ்ணு வழிபாடு மிகச் சிறப்பு

கன்னி

மிகுந்த அன்புடனும், ஆதரவுடனும் இருக்கும் கன்னி ராசி நேயர்களே…! ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால், நல்ல வளர்ச்சி அடையக் கூடிய வாரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் சிறப்பாக இருக்கும். கடந்த கால துன்பங்கள் அனைத்தும் விலகி நல்ல இனிமையான காலமாக அமையும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபகரமான பயன்களைப் பெறுவீர்கள். நல்ல நட்பு உங்களை நாடி வரும். உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய பொருள்கள் வாங்குவதற்கான யோகமாக அமையும். இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பேச்சில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சாதகமான நாள்கள்: 22, 23, 24, 25 மற்றும் 26

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை மற்றும் சிவன் வழிபாடு மிகச் சிறப்பாக அமையும்.

துலாம் முதல் மீனம் வரை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக  வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Next Week Rasi Palan | Next Week Rasipalan in Tamil | Vaara Rasi Palan in Tamil | Weekly Horoscope in Tamil | Indha Vara Rasi Palan | Weekly Rasipalan | Vara Raasi Palan August 21 2022 to August 27 2022 | Next Week Rasi Palan Meenam | Next Week Rasi Palan mithunam | Thulam Rasi Palan Next Week | Viruchigam Rasi Palan Next Week | Kanni Rasi Palan Next Week | Kumbam Rasi Palan Next Week | Dhanusu Rasi Palan Next Week | Mesha Rasi Palan Next Week | Magaram Rasi Palan Next Week | Mesham Next Week Rasi Palan | Next Week Rasi Palan 2022 | Next Week Rasi Palan august 2022 | Weekly Meena Rasi Palan in tamil | Weekly Rasi Palan Astrosage in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்