Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: இந்த 3 ராசிக்காரங்க நிலை இந்த வாரம் டாப் தான்... வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 15, 2022 & 16:50 [IST]
Next Week Rasi Palan: இந்த 3 ராசிக்காரங்க நிலை இந்த வாரம் டாப் தான்... வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆடி மாதம் முதல் வாரத்தில் 17.07.22 முதல் 23.07.22 வரை   சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் அடையபோகும் வார ராசிபலன் பற்றி காண்போம்.

Next Week Rasi Palan 


Part 1: மேஷம்- கடகம் வார ராசிபலன்


சிம்மம்

பொது பலன்: உங்கள் மனதில் இந்த வாரம் முழுவதும் பல எண்ணவோட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.  தொழில் சார்ந்த எண்ணங்கள் அதிகமாக எட்டிப்பார்க்கும். சிலர் இருக்கும் இடத்திலிருந்து லட்சியத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவீர்கள். தொலைதூர பயணங்கள் இருக்கும். நிதி நிலையில் செலவுதான் அதிகமாக இருக்கும்.

வீட்டில் உங்களின் முக்கியத்துவத்தை குடும்பத்தினர் புரிந்து கொள்வர், சில எதிர்மறை எண்ணங்கள் மனநிம்மதியைக் குழப்பும். குடும்பத்தினரின் ஆலோசனை உங்களை தெளிவுபடுத்தும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை இருக்கும்.

மகம்: வியாபார ரீதியாக சில பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். நல்ல தகவல் கிடைக்கும். தொட்ட காரியம் வெறியில் முடியும்.

பூரம்: சுப செலவுகள் அதிகமாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும்.

உத்திரம்: ஆரோக்கிய பிரச்சனை இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  நரசிம்மர்

கன்னி

பொது பலன்: இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி சற்று காலதாமதாக நடக்கும். ஆனால், வெற்றி நிச்சியம். வெற்றியைப் பெறுவதற்கு கடுமையாகப் போராட வேண்டும்.  நிதி நிலையில் பிரச்சனை இல்லை.

வீட்டில் சிறிய பிரச்சனைகள் உருவாகும். நண்பர்களுடன் சிறிய சண்டைகளை உருவாக்கிக் கொள்வீர்கள், ஆனால் உங்களின் தேவை நண்பர்களுக்கு தேவைப்படும். புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். உடல்நலத்தின் மீது கவனம் காட்ட வேண்டும்.

உத்திரம்: அதிகமான மன தைரியத்துடன் இருப்பீர்கள். உங்கள் மன உறுதி  புதிய முயற்சிகளைத் துணிச்சலாக எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்க்க முடியும்.

அஸ்தம்: வெற்றிக்காகக் கடுமையாகப் போராடுவீர்கள்,  உடல் நலக்கோளாறு ஏற்படும்.  

சித்திரை: ஆரோக்கியக் கோளாறு ஏற்படும். கையில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடாசலபதி

பரிகாரம்: -

துலாம்

பொதுபலன்: இந்த வாரம் உங்களுக்கு புதுமையாக இருக்கும், புதிய மனிதர்களின் அறிமுகத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அதிகமாக தோன்றும், சிலருக்கு கணமான பண உதவி கிடைக்கும். 

கணவன் மனைவி உறவில் நல்லிணக்கமாக உறவு இருக்கும். திருமணத் தடை நீங்கும். உடல்நலம் மேம்படும். பெற்றோருடன் ஆனந்தமாக இருப்பீர்கள்.

சித்திரை: குடும்ப பிரச்சனைகள் தீரும், உறவு மத்தியிலிருந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண்பீர்கள். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது.

சுவாதி: ஆனந்தமான குடும்ப வாழ்க்கையைப் பெற முடியும், நல்ல தன ஸ்தானம் உண்டு.

விசாகம்: திருமணப் பந்தம் ஆனந்தமாகும்,  இந்த வாரம் உங்கள் யோக காலத்தின் ஆரம்பமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. 

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: பருப்பு மற்றும் மஞ்சள் தானமாக அளிக்க வேண்டும்.

விருச்சிகம்

பொதுபலன்: உங்களின் ஆன்மீக நாட்டம் இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், இதுவரை அனுபவித்த அனுபவித்த கஷ்டம் இந்த வாரம் முதல் உங்களின் வெற்றி அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும். 

குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். காதல் வாழ்கையில் நெருக்கம் அதிகமாகும். உடல்நலம் சிறப்பாக உள்ளது.

விசாகம்: கோவில் சார்ந்த திருப்பணியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் திடமான வளர்ச்சி இருக்கும்.  

அனுஷம்: எதிர்பார்த்த பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு நிச்சியமாக இருக்கும்.

கேட்டை:  நல்ல நேரமாக இந்த வாரம் அமையும். திடமான பண வரவு இருக்கும், நிதி வளர்ச்சி இருக்கும்.

வழிபடவேண்டிய தெய்வம்: குல தெய்வம் 

பரிகாரம்: அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு வளமான வாழ்க்கை அளிக்கும். 


Part 3: மகரம்- மீனம் வார ராசிபலன்.


இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…




 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்