Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan in Tamil: 17.07.2022- 23.07.2022 இந்த 2 ராசிக்காரர் தான் இந்த வார அதிர்ஷ்டசாலிகளா.....?. வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 15, 2022 & 16:00 [IST]
Next Week Rasi Palan in Tamil: 17.07.2022- 23.07.2022 இந்த 2 ராசிக்காரர் தான் இந்த வார அதிர்ஷ்டசாலிகளா.....?. வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆடி மாதம் முதல் வாரத்தில் உங்கள் ராசி அடையப்போகும் பலன் பற்றி அறிய வேண்டுமா.... எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாக அமையும். இந்த பதிவில் மேஷம் முதல் கடகம் வரை முதல் பாகத்தின் வார ராசிபலனைக் காணலாம்.

வார ராசிபலன் (Next Week Rasi Palan in Tamil- 17.07.22 to 23.07.22)

மேஷம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த ஆடி மாதத்தின் முதல் வாரம் உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும், முன்னோர் சார்ந்த காரியம் அனுகூலமாகும். பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் சிறிய கருத்து வேறுபாடு வந்து மறைந்து போகும்.  மாணவர்களின் கல்வி அமோகமான வளர்ச்சி கொள்ளும்.

அஸ்வினி: திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும்.  

பரணி: தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, வீட்டிற்கு சிறிய உதிரி செலவு செய்வீர்கள்.

கிருத்திகை: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த  சலுகை கிடைக்கும், தலைமை பதவியில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  முருகன்

பரிகாரம்: காலையில் கந்த சஷ்டி கவசத்தை முழுமனதுடன் தினமும் காலையில் சபித்த பிறகு தினசரி வேலையைத் தொடங்கவும். 

ரிஷபம்

பொது பலன்: இந்த வாரம் நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாகத் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். உங்களுக்கு தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பயணம் உண்டு, சில மனக் குழப்பம் உண்டு.  

இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும், உறவினரின் உதவி இந்த வாரம் மிகப்பெரிய  பலமாக இருக்கும். நிடி நிலை ஓரளவு நன்றாக உள்ளது, செலவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும், அதைக் கட்டுப்படுத்த முயலவும். முக்கியமாக மருத்துவச் செலவுகள்  வரும்.

கிருத்திகை: தொழில் மாற்றம் சிந்தனைகள் அதிகமாகத் தோன்றும், உங்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

மிருக ஸீரிஷம்: புதிய வாய்ப்புகள் இருக்கும், ஓரளவு கையில் பணப் புழக்கம் இருக்கும்.

ரோகிணி: இந்த வாரம் முழுவதும் உங்கள் மனம் ஒருநிலையில் இருக்காது, தொழிலை மாற்றி கொள்ளலாமா என்ற சிந்தனை அதிகமாகத் தோன்றும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு பால், வாசனை பொருட்கள் மற்றும் சந்தனம் தானமாக அளிக்க வேண்டும்.

மிதுனம்

பொது பலன்: இந்த வாரம் உங்களுக்கு ஆதரவான வாரமாக அமையும், முக்கியமாக அலுவலகத்தில் கிடைக்கும் சகாயம் நல்ல மதிப்பை மட்டுமின்றி நல்ல நட்பையும் உருவாக்கும். தொழில் ஸ்தானத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.   

வீட்டில் இன்பமான சூழல் அதிகமாக இருக்கும். நண்பர்களின் மூலம் பல உதவிகள் கிடைக்கும், இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நண்பர்களின் உதவி ஒரு மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, தூக்கமின்மை போன்ற பிரச்சனை அதிகமாக இருக்கும். 

மிருக ஸ்ரிஷம்: உங்களின் வெற்றி இந்த நல்ல மதிப்பை உருவாக்கும், உயர் பட்டம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

திருவாதிரை:  தொழில் ஸ்தானம் பிரம்மாண்டமாக இருக்கும், நீங்கள் கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியும்.

புனர் பூசம்: சுபநிகழ்ச்சி பற்றிய ஆலோசனையில் உங்கள் முக்கியத்துவம் பெரியதாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர்

கடகம்

பொது பலன்: இந்த வாரம் உங்களுக்குப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து முன்னேற்றம் எட்டிப்பார்க்கும். நல்ல தனலாபம் கிடைக்கும். இதுவரை அலுவலகத்தில் இருந்த பிரச்சனை படிப்படியாகக் குறையும். 

திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருக்காது, வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க முடியும், நீண்ட நாட்களாகக் குழந்தை பேறு எதிர்பார்க்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.

புனர் பூசம்: குடும்ப வாழ்க்கை அருமையாக உள்ளது, குடும்ப உறுப்பினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். நல்ல தன லாபம் உண்டு. தொழில் பிரச்சனை குறையும்.

பூசம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி இருக்கும். நல்ல தன லாபம் பார்க்க முடியும்.

ஆயில்யம்: தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, ஆரோக்கியக் குறை ஏற்படும்.  

வழிபட வேண்டிய தெய்வம்:  ராகவேநதர்

பரிகாரம்: காலையில் எழுந்தவுடன் சிவனை நினைத்து தியானம் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.


Part 2: சிம்மம்- மீனம் வார ராசிபலன்.

 


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்