Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Next Week Rasipalan in Tamil: இது தான் உங்க தலைவிதினு எழுதிருக்கு…! அதுலயும் இந்த ராசிக்காரருக்கு கண்டிப்பா இது நடந்தே தீரும்…..

Gowthami Subramani July 15, 2022 & 17:00 [IST]
Next Week Rasipalan in Tamil: இது தான் உங்க தலைவிதினு எழுதிருக்கு…! அதுலயும் இந்த ராசிக்காரருக்கு கண்டிப்பா இது நடந்தே தீரும்….. Representative Image.

Next Week Rasipalan in Tamil: இந்த வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள், லாபம் பெறுவர், எவர் நஷ்டத்தில் இருக்கப் போகிறார், இது போன்ற பல்வேறு குணங்களை எந்தெந்த ராசிக்காரர்கள் பெறப்போகிறார்கள் என்பது பற்றி இதில் காணலாம். அதன் படி, தமிழ் மாதமான வரவிருக்கும் ஆடி மாதத்தின் முதல் வாரத்தில் எத்தகைய பலன்களை யார் யாரெல்லாம் பெறப்போகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள். இதில், தனுசு ராசி முதல் மீனம் ராசி வரை இந்த வார ராசி பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


மேஷம் ராசி முதல் கடகம் ராசி வரையிலான இந்த வார ராசிபலன்!


தனுசு (Next Week Rasipalan Dhanusu)

பொதுபலன்: எல்லாவற்றிலும் தெளிவாக இருக்கும் தனுசு ராசி நேயர்களே..! உங்களுடைய பெற்றோர் சார்ந்த உடல் நிலையில் அதிக கவனம் தேவை. அறிக்கை, எழுத்து, பத்திரம், புக் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் தெளிவாக இருப்பது அவசியம். வருமான வரி துறையில்  வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு பெரிய சொத்தை விற்று, மற்ற கடன்களை அழிக்கக் கூடிய நன்மை உண்டாகும். உடல் நிலைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனோதிடம், தன்னம்பிக்கை அதிகம் உண்டாகும்.

மூலம்: அனுகூலமான வாரமாக உள்ளது. வீட்டில் உள்ளவர்களின் உடல் நிலையைப் பாதுகாப்பது நல்லது.

பூராடம்: மறைமுகமான பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம். ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொள்வீர்கள்.

உத்திராடம்: பிரச்சனைகளால், அதிக அழுத்தம் உண்டாகும். இருப்பினும், எல்லாவற்றையும் எதிர்த்து சமாளிப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: குருமார்கள் வழிபாடு

மகரம் (Next Week Rasipalan Magaram)

பொதுபலன்: பொறுமையின் சிகரமாய் எல்லாவற்றிலும் வெற்றி பெறும் மகர ராசி நேயர்களா நீங்கள். இரண்டாம் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். அப்பாவுக்கும், உங்களுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். புக், ஆடிட்டிங், அக்கவுண்ட்ஸ், பதிவு உள்ளிட்டவற்றில் கவனமா இருக்க வேண்டும். புதிய மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். நல்ல காரியங்கள், சுபவிஷயங்கள் நடக்கும். பொருளாதாரம் நன்றாக உள்ளது.

உத்திராடம்: நல்ல வாய்ப்பு, நல்ல மனிதர்களுடன் பழகுவது உள்ளிட்ட பல்வேறு நல்ல காரியங்கள் உங்களுக்கு நடக்கும்.

திருவோணம்: வீடு, மனை, வாகனம் உள்ளிட்டவை கண்டிப்பாக அமையக்கூடிய வாரம்

அவிட்டம்: திருமண பிராப்தங்கள் தள்ளிப் போயினும், விரைவில் அம்மா மூலமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேய சுவாமி வழிபாடு

கும்பம் (Next Week Rasipalan Kumbam)

பொதுபலன்: எதிரிகளாக இருந்தாலும், அவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி நேயர்களே..! இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் உள்ளிட்ட சிந்தனைகள் மேலோங்கும். அரசு சார்ந்த வேலைகள், படிப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் அபார வெற்றி கிடைக்கும். அப்பாவுக்கும், உங்களுக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் நடக்கும். ஆனால், உடனடியாக சமாதானம் ஆகிடுவீர். மூக்கு, தொண்டை, வாய் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். இளைய சகோதரர்கள் மூலம் நல்லது கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்க்ககூடிய நல்ல விஷயங்கள் கிடைக்கும். பண வரவு உண்டாகும்.

அவிட்டம்: ஓடிடி சார்ந்தவை மிகப் பெரிய பலன் கிடைக்கும். திருமண தடைகள் அனைத்தும் விலகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சதயம்: ஐடி துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பூரட்டாதி: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பாராத வகையில் நன்மை அடைவீர்கள்

வழிபட வேண்டிய தெய்வம்: பத்மநாப சுவாமி வழிபாடு

மீனம் (Next Week Rasipalan Meenam)

பொதுபலன்: பாட்டு, நடனம், இசை, முக்கியமாக பேச்சு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி உண்டு. கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் தீரும். காதல் கைகூடும். ஆண் குழந்தை பிறக்கும். பணத் தேவைகள் பூர்த்தி அடையும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். மனசு பூரிக்கும் அளவிற்கு பெரிய விஷயங்கள் நடக்கும். எல்லா விஷயங்களும் நன்மை கிடைக்கும். எதிர்பாராத அளவில் நன்மை கிடைக்கும். எடுக்ககூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

பூரட்டாதி: பிரம்மாண்டமான பேச்சுத் திறமை உண்டு. அதை வைத்து பிரம்மாண்டமான அளவில் பணம் சேமிப்பீர்கள்.

உத்திரட்டாதி: தேவையான காலத்தில் பணம் சேரும்.

ரேவதி: முக லட்சனம் பிரம்மாண்டமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போகும் நபர்களுக்கு விரைவில் கைகூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சந்நியாசிகள் வழிபாடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Next Week Rasipalan in Tamil | Weekly Rasipalan in Tamil | Adutha Vara Rasipalan in Tamil | Next Week Rasipalan Dhanusu | Next Week Rasipalan Magaram | Next Week Rasipalan Kumbam | Next Week Rasipalan Meenam | Next Week Rasipalan Dhanusu in Tamil | Next Week Rasipalan Magaram in Tamil | Next Week Rasipalan Kumbam in Tamil | Next Week Rasipalan Meenam in Tamil | Next Week Rasi Palan 2022 | Next Week Rasi Palan Mithunam | Thulam Rasi Palan Next Week | Viruchigam Rasi Palan Next Week | Kanni Rasi Palan Next Week | Dhanusu Rasi Palan Next Week | Kumbam Rasi Palan Next Week | Mesha Rasi Palan Next Week


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்