Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aadi Month Rasipalan 2022 in Tamil: இந்த 4 ராசிக்கு ஆடி மாதம் முழுவதும் நல்ல பண வரவு தான்... ஆனால் வர பணம் எங்க போகுதுனு தான் தெரியாது...!  

Manoj Krishnamoorthi July 12, 2022 & 17:05 [IST]
Aadi Month Rasipalan 2022 in Tamil: இந்த 4 ராசிக்கு ஆடி மாதம் முழுவதும் நல்ல பண வரவு தான்... ஆனால் வர பணம் எங்க போகுதுனு தான் தெரியாது...!  Representative Image.

சுபகிருது வருடம் ஆடி மாதம் (17.07.2022- 16.08.2022) தினங்களில், உங்க ராசிக்கு இந்த ஆடி மாதம் முழுவதும் என்ன பலன் (Aadi Month Rasipalan 2022 in Tamil) என்பதைப் பற்றி அறிய வேண்டுமா...? கிடைக்கும் பலனிலிருந்து இன்னும் நல்ல பலன் வேண்டுமா... அப்போ இந்த பரிகாரங்களை செய்யவும்.

PART 1: மேஷம்- கடகம் ஆடி மாத ராசிபலன் 2022 

சிம்மம்

பொதுபலன்:  தன்னம்பிக்கை அதிகம் நிறைந்த உங்களுக்கு  இந்த மாதம்  உங்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வகையில் அமையும், மற்றவர்களின் மூலம் உங்களுக்கு இந்த மாதம் பல உதவிகள் கிடைக்கும்.  தொழில் சார்ந்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள். சுப காரியங்கள் பற்றி பேசுவீர்கள், சுப செலவுகள் இருக்கும். 

வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும். திருமண தடை நீங்கி திருமண பேச்சி தோன்றும். இல்லற வாழ்க்கை இயல்பாக இருக்கும்.  தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். உடல்நலத்தில் சுறுசுறுப்பு சற்று குறைந்து காணப்படும்.

மகம்: நல்ல தகவல் உங்களை தேடி வரும். இந்த ஏற்படும் மாற்றம் கசப்பாக இருந்தாலும் வாழ்க்கையை மேம்படுத்தும்.

பூரம்:  மன உறுதி அதிகரிக்கும், சில செலவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும், அதைக் கட்டுப்படுத்த முடியாது. 

உத்திரம்: சுப செலவு ஏற்படும். 

வழிபட வேண்டிய தெய்வம்:  நடராஜர்

பரிகாரம்: பிரதோஷ தினத்தில் வடக்கு திசையில் அமர்ந்து சிவநாம மந்திரம் சொல்ல வேண்டும்.

சிவநாம மந்திரம்

கன்னி

பொதுபலன்:  இந்த மாதம் உங்களுக்கு பிரம்மாண்டமான வளர்ச்சி கொள்ளும் மாதமாக அமையும், தொழில் போட்டிகள் குறையும். தொழில் ஸ்தானத்தில் இந்த மாதம் ஏறுமுகம் தான், படிப்படியான வளர்ச்சி இருக்கும். ஆனால் வெற்றி பெறும் வரை போராட வேண்டியிருக்கும். நிதி நிலையைப் பொருத்தவரை தேவையில்லாத செலவுகள் அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை  பொருத்தவரை இந்த மாதம் பெரியதாக சந்தோஷம் இல்லையென்றாலும் நிம்மதியாக இருக்க முடியும்.  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், சிறிய தொல்லைகள் இருக்கும்.   

உத்திரம்: சகோதரர்களின் மூலம் நன்மைகள் நடக்கும், தொழில் உங்களின் நிலை பலமாக இருக்கும்.

அஸ்தம்: வெற்றி அடைவதில் ஒரு போராட்டம் இருக்கும், தடைபட்ட காரியம் பற்றிய சிந்தனை தோன்றும்.

சித்திரை: தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரும் ஆனால் அது பெரியதாக பாதிக்காது.

வழிபட வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடச்சலபதி

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில் சென்று பால் மற்றும் வாசனைத் திரவியங்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும். 

துலாம்

பொதுபலன்:  இந்த ஆடி மாதம் முழுவதும் உங்களும் முன்னேற்றமான தருணமாக அமையும், புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடும் துலாம் ராசிக்காரருக்கு வேலை கிடைக்கும், தொழில் மாற்றம் சிறப்பாக அமையும். உங்களின் அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

குடும்ப உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடு தீரும், குடும்பத்தில் நல்ல புரிதல் இருக்கும்.  கையில் பணப் புழக்கம் இருக்கும், உங்களைத் தேடி கௌரவ பதவி வரும். பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வியில் அபாரமான முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

சித்திரை: இயல்பான குடும்ப வாழ்க்கை இருக்கும், உங்கள் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

சுவாதி: இன்பமான இல்லறம் அமையும், கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். 

விசாகம்: பணியிடத்தில் நிலைத்த பிரச்சனை அகலும், கணமான பண வரவு இருக்கும். சிறப்பான உடல்நலம் உள்ளது.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

பரிகாரம்: பசு மாட்டுக்கு உணவளித்தல் வேண்டும்.

விருச்சிகம்

பொதுபலன்: கன்னி ராசிக்காரரே சாதகமான பலனால் இன்ப வெள்ளத்தில் நீந்தும் நிலையில் இருக்க போகிறீர்கள். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருக்கும் விருச்சிக ராசிக்காரருக்கு  நல்ல வளர்ச்சியாக இருக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரம்மாண்டமான மாற்றம் நிகழும்.  எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும், உங்களை சந்தோஷப்படுத்தும். நிதி நிலைமை நன்றாக உள்ளது.

கணவன் மனைவி உறவில் சிறிய ஊடல்கள் இருக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சாதகமான பலன் கிடைக்கும்.  உங்கள் மதிப்பு அனைத்து இடத்திலும் கூடும்.

விசாகம்: உங்கள் வெற்றி உங்களுக்கு பலரின் நட்பைத் தரும். பணியில் செய்யும் புதிய முயற்சிகள் அசுர வளர்ச்சி கொள்ளும்.

அனுஷம்: இந்த மாதம் எதிர்பார்க்காத பயணம் சந்தோஷமாக்கும்.  தந்தை வழி பிரச்சனைகள் நீங்கும். நிம்மதியாக இருக்க முடியும். 

கேட்டை: உங்களுக்கு கிடைக்கும் நல்ல தகவல் மனதை ஆனந்தமாக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி காண முடியும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்:  முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும்.

PART 3: தனுசு - மீனம் ஆடி மாத ராசிபலன்

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: aadi month 2022 rasi palan in tamil, Aadi Matha Rasi palan 2022,  aadi matha rasi palan 2022 in tamil, aadi matha rasi palan simmam 2022, aadi matha rasi palan 2022 kanni, aadi matha rasi palan 2022 thulam, aadi matha rasi palan 2022 viruchigam, aadi month 2022 rasi palan simmam, aadi matha rasi palan simmam, aadi matha rasi palan 2022 simmam, aadi matha rasi palan 2022 kanni, aadi matha rasi palan 2022 viruchigam, aadi matha rasi palan 2022 thulam

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்