Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan in Tamil: இன்ப வெள்ளத்தில் இந்த வாரம் திளைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 12- 18 வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 10, 2022 & 17:45 [IST]
Next Week Rasi Palan in Tamil: இன்ப வெள்ளத்தில் இந்த வாரம் திளைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 12- 18 வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வைகாசி மாதம் (ஜூன் 12 முதல் ஜூன் 18 வரை) வார ராசிபலனில் சிம்மம்- விருச்சிகம் வரை (Next Week Rasi Palan in Tamil) தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண்போம்.


Representative Image. மேலும் படிக்க: முதல் 4 ராசியின் (மேஷம்- கடகம்) வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


சிம்மம்

பொது பலன்: தன்னம்பிக்கை குணமும் கம்பீர நடையும் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக  இருக்க வேண்டும், மருத்துவ செலவு உருவாகும். சிந்திக்காமல் அவசரப்பட்டு வாக்கு அளிக்காதீர். தொழிலில் இருக்கும்  எதிர்ப்பை சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். தன ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. தொழிலில் வழக்கமான நிலை நிலவும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுவது நல்லது. பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் பேச்சின் மூலம் சிக்கல்கள் உருவாகும். குடும்பத்ட்ஜ்ஹினரின் அன்பு மன நிம்மதியைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் குறை ஏற்படும், உடல்நலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.  

மகம்: பண தேவைகள் குறையும், திருப்திகரமான பண வரவு இருக்கும்.

பூரம்: ஆரோக்கியத்தில் கவனம் தேவை

உத்திரம்: ஆரோக்கியக் குறை ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

கன்னி

பொது பலன்: பிறரின் தேவையில் அக்கறை கொண்ட கன்னி ராசிக்காரரே இந்த வாரம் தொழிலில் அதிக கவனம் காட்ட வேண்டும்,  உங்கள் நிம்மதியைக் குறைக்கும் சகவாசங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. மனநிலை பதட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில்  நிம்மதி இருக்கும். பண வரவு வந்தாலும் நிதி நிலையில் செலவு இருக்கும். கல்வியில் பிரச்சனை இருக்காது. 

உத்திரம்: வாக்குவாதம் 

அஸ்தம்: உடல்நலக் குறைவு

சித்திரை: பிரச்சனைகளை சந்திப்பீர்கள்

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் எதிர்பார்க்காத பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக நம்பிக்கை பிறக்கும். வியாபாரம் செய்பவருக்கு இந்த வாரம் பல முன்னணி பிரமுகரின் அறிமுகம் கிடைக்கும். செல்வ நிலை அமோகமாக உள்ளது, திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் வெற்றி நிச்சியம் நில பரிவர்த்தனைகளில் தலையிட வேண்டாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். 

சித்திரை: செல்வ நிலை உயர்ந்தாலும் கடன் வாங்குவீர்கள்

சுவாதி: குடும்பத்தில் ஆனந்தம் இருக்கும், சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

விசாகம்: நன்மை  அதிகமாக இருக்கும், தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  லட்சுமி தேவி

விருச்சிகம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சூழல் இருக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவி  கிடைக்கும், மனம் நிம்மதியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். மன நிலை தெளிவாக இருக்கும். தன ஸ்தானம் நன்றாக உள்ளது. பொருளாதாரம் ஏற்றம் இருக்கும்.திருமண பாக்கியம்  உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளருடன் வாக்குவாதம் செய்யாமல் உழைத்தால் தொழிலில் வெற்றி காண முடியும். 

விசாகம்: சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். 

கேட்டை: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

அனுஷம்: திருமண பாக்கியம் உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  பெருமாள்

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்