Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: ஆனி மாதத்தின் மொத்த அதிர்ஷ்டத்தையும் அள்ளப்போகும் அதிர்ஷ்டக்கார ராசி உங்க ராசியா...! வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 24, 2022 & 17:00 [IST]
Next Week Rasi Palan: ஆனி மாதத்தின் மொத்த அதிர்ஷ்டத்தையும் அள்ளப்போகும் அதிர்ஷ்டக்கார ராசி உங்க ராசியா...! வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி  மாதம் 12 ஆம் தேதி முதல் ஆனி 18 ஆம் தேதி வரை (26.06.2022- 02.07.2022) வார ராசிபலனில் முதல் ஆறு ராசியின் ( மேஷம்- கன்னி) வரை பற்றி அறிய இந்த பதிவு படியுங்கள். மேஷம் முதல்  கன்னி வரை  முதல் 6 ராசியின் பலன், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் முதலியவற்றையும் காண்போம்.

மேஷம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த வாரம் நல்ல செல்வ நிலை இருக்கும். கணமான பன வரவு இருக்கும். குடும்பத்தினருக்கு எதாவது ஒரு விலையுர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது. முன்னோர்களின் ஆசியால் மாணவர்களின் கல்வி நிலையில் நன்மைகள் நிகழும். தொழிலில் மேலதிகாரியுடன் நல்ல உறவு இருக்கும்.

அஸ்வினி: ராஜ யோகம் கிடைக்கும்.

பரணி: வண்டி வாகனம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கிருத்திகை: நல்ல தகவல் தந்தை வழி மூலம் கிடைக்கும். 

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பெருமாள்  

பரிகாரம்: நன்மைகள் பல நிகழ்ந்து நிம்மதியான வாழ்வைப் பெற சனிக்கிழமைகளில் துளசி மாலை படைத்து பெருமாளை வணங்க வேண்டும்.

ரிஷபம்

பொது பலன்: தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த உங்களுக்கு இந்த வாரம் இருக்கும், பதவி உயர்வுக்காகக் காத்திருந்த ரிஷப ராசிக்காரருக்கு பதவி உயர்வு அல்லது சில முக்கிய பதவிகள் கிடைக்கும்.  வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். மேல்படிப்பு படிக்க நினைப்பவருக்கு  உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி இந்த வாரம் மிகப்பெரிய பலமாக இருக்கும். நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலை சமாளிக்கும் வகையில் இருக்கும். குடும்ப வாழ்க்கை  நலமாக இருக்கிறது. 

கிருத்திகை: மன தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

மிருக ஸீரிஷம்: மாற்றங்கள் பல நிகழும்.

ரோகிணி: பயணங்கள் இருக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பார்வதி

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பசு மாட்டுக்கு உணவளிப்பது நலமான வாழ்க்கை தரும்.

மிதுனம்

பொது பலன்: இந்த  வாரம் உங்களுக்கு மாற்றம் நிறைந்த வாரமாக இருக்கும், புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் அதிகமாக இருக்கும்.  செலவுகள் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை நீங்கி வேறு ஒரு இடத்தில் நல்ல நிலை அமர்த்துவிக்கும் நேரமாக இந்த வாரம் இருக்கும். முன்னதாகவே செய்த மிகப்பெரிய முதலீடு மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும்.

மிருக ஸ்ரிஷம்:  புதிய தொழில் தொடங்க சரியான நேரம்.

திருவாதிரை: தொழில் மாற்றம் ஏற்படும்.  

புனர் பூசம்: குடும்பத்திற்காக அதிகமான செலவு செய்ய வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ரங்கநாதர் வழிபாடு

பரிகாரம்: பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்தல் வேண்டும்.

கடகம்

பொது பலன்: உங்க ராசிக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக இருக்கும், நண்பர்களின் மூலம் பல ஆதாயம் கிடைக்கும்.  சில கடக ராசிக்காரருக்கு முக்கிய  பதவிகள் தானகவே வரும்.  முன்னோர் வழி சொத்துகள் கிடைக்கும். நல்ல தொழில் முன்னேற்றம் இருக்கும். சொந்தபந்தத்துடன் ஆனந்தமாக இருப்பீர்கள். அமோகமான நிதி வளர்ச்சி இருக்கும்.  

புனர் பூசம்: பதவி உயர்வு.

பூசம்: சுப நிகழ்ச்சிகள் நடக்கும், திருமணமாகாதவருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

ஆயில்யம்: அதீத நன்மைகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் 

பரிகாரம்: இல்லை

சிம்மம்

பொது பலன்: உங்கள் வேலையின் விளைவு அனைவரையும் கவரும்,  தொழில் மிகவும் நன்றாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் சமாளித்து இயல்பான  வாழ்க்கை வாழுவீர்கள். புதிய மனிதரின் அறிமுகம் நல்ல மதிப்பை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிலையான செல்வ நிலை உண்டு.    

மகம்: உடல்நலக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பூரம்: திருமண பேச்சு வார்த்தை நடைபெறும்.

உத்திரம்: உங்கள் மதிப்பை சுற்றத்தார் மத்தியில் உயர்த்தி காட்டுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன் 

பரிகாரம்: அனுமன் சன்னதி செல்லுதல் நல்ல வளர்ச்சி அளிக்கும்.

கன்னி

பொது பலன்:  இந்த வாரம் உங்கள் மனதில் அதிகமான  சிந்தனைகள் இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களைப் புரிந்து கொள்ளுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல் முன்னேற்றம் அளிக்கும். உங்களின் சோம்பேறித் தனத்தால் சில முக்கிய வாய்ப்புகளைத் தவறவிடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களின் கல்வி நிலையில் எந்த பதிப்பும் இல்லை. ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

உத்திரம்: தந்தை வழியில் பல நன்மைகள் கிடைக்கும்.

அஸ்தம்: நல்ல செய்திகள் கிடைக்கும், வெளிநாடு பிரயாணம் செய்யும் வாய்ப்பு அதிக உள்ளது.

சித்திரை: குடும்ப பிரச்சனைகள் குறையும்,  திருமணத் தடை நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருப்பதி

பரிகாரம்: அதிகாலையில் சூரிய வழிபாடு செய்தல் வேண்டும்.


Representative Image. Part-2: துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின்  வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்