Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: இந்த வாரம் தனுசு ராசியின் நிலைமை இப்படி உள்ளதே?  ஆனால் கும்ப ராசிக்காரருக்கு... ஜூன் 12- 18 வார ராசிபலன்.

Manoj Krishnamoorthi June 11, 2022 & 11:15 [IST]
Next Week Rasi Palan: இந்த வாரம் தனுசு ராசியின் நிலைமை இப்படி உள்ளதே?  ஆனால் கும்ப ராசிக்காரருக்கு... ஜூன் 12- 18 வார ராசிபலன்.Representative Image.

சுபகிருது வைகாசி மாதம்  இறுதி  வாரத்தின் (ஜூன் 12 முதல் ஜூன் 18 வரை) வார ராசிபலனில் தனுசு முதல் மீனம் வரை கடைசி 4 ராசியின் (Next Week Rasi Palan) வார ராசிபலன்  உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண இவ்வாசகம் துணையாக இருக்கும்.


Representative Image. ALSO READ: சிம்மம் முதல் விருச்சிகம் வரை முற்பகுதியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். 


தனுசு

பொது பலன்:  சுயமரியாதையைக் கைவிடாமல் தன்னலமற்ற குணத்துடன் இருக்கும் உங்களுக்கு இந்த வாரம் மறைமுகமான பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும், உங்கள் முதலீடுகள் வெற்றி அளிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். மாணவர்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியில் நல்ல மாற்றங்கள் பல இருக்கும், சிலருக்கு பணி மாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் யோகம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகமாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

மூலம்: செய்த உதவியின் பலன் மகிழ்ச்சியை அளிக்கும். 

பூராடம்: வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும்.

உத்திராடம்: வாழ்வு நிம்மதியாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  கிருஷ்ணர் 

மகரம்

பொது பலன்:  உங்கள்  அன்பான சுபாவத்தால்  மற்றவர்களின் அன்பைக் கவரும் உங்களுக்கு இந்த வாரம் ஓரளவு நன்றாக உள்ளது, உங்கள் பிடிவாதத்தால் சில வாக்குவாதத்தை உருவாக்குவீர்கள். பண வரவு இருக்கும். வியாபாரிகள் முதலீடுகள் நல்ல பொருளாதார ஏற்றத்தை அலிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். மகர ராசி பெண்களுக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும்.  உடல் நலத்தில் பாதிப்பு இல்லை. மாணவர்களின் கல்வி நிலை நன்றாக உள்ளது, சில மகர ராசி மாணவர்களுக்கு ஆசைப்பட்ட கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்க போகிறது.

உத்திராடம்: இரத்த சொந்தத்தின் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும்.

திருவோணம்:  மன தெளிவாக இருக்கும். இன்ப சுற்றுலா போக நினைப்பீர்கள்.

அவிட்டம்: தொழில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக தோன்றும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  பார்வதி தேவி

கும்பம்

பொது பலன்: உங்கள் அறிவு கூர்மையால் பல செயல்கள் செய்து எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கும்ப ராசிக்காரரே. இந்த வாரம் பெற்றோரின் மனதை ஆனந்தபடுத்துவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். கல்வியில் கவனம் தேவை. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலைத் தேடுபவருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். மனம் நிம்மதியாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  

சதயம்: பிற நபரின் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடக்கும்.

அவிட்டம்: பண தேவையைப் பூர்த்தி செய்ய பயணம் செய்வீர்கள்.

பூரட்டாதி:  கற்பனைத் திறன் நன்றாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

மீனம்

பொது பலன்: இந்த வாரத்தின்  முற்பகுதி கொஞ்சம் பதட்டமான நிலையிலிருந்தாலும் அதன்பிறகு நிம்மதியான மன நிலை வாரத்தின் பின்பகுதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். வீட்டில் சந்தோஷம் இருக்கும், அலுவலகத்திலும் சாதகமான நிலை இருக்கும்.  திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது. கல்வி நிலை அமோகமாக உள்ளது. 

பூரட்டாதி: நண்பர்களின் மூலம் சந்தோஷம் பிறக்கும்,  தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

உத்திரட்டாதி: மனக் கவலைகள் இருக்கும், அதைத் தாண்டி புத்துணர்ச்சியுடன் செயல்பட பிறரின் அறிவுரை தேவைப்படும். 

ரேவதி: விடாமுயற்சியால் நன்மைகள் அதிகமாக நிகழும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்