Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - கடன்

மிதுனம் - சோதனை

கடகம் - இன்பம்

சிம்மம் - கவலை

கன்னி - வரவு

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

விருப்பங்கள் நிறைவேறும் நாள். எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு பூர்வீக நிலம் விற்பனை சம்பந்தமான காரியங்கள் கைகூடி வரும். திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கிறது. சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். துணையுடன் யதார்த்தமாக நடந்துக்கொள்வது நல்லது. நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

சந்தேகப்படுவது தவிர்த்துக் கொண்டால் போதும் நாள் சுமூகமாக இருக்கும். இல்லையென்றால், பிரியமான ஒருவருடன் மனகசப்பு ஏற்படலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மறுபுறம் செலவும் அதிகரித்துக் காணப்படும். கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சமயோசித புத்தியை பயன்படுத்த வேண்டியது அவசியம். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது சிறந்தது.  உடல் சூடு சம்பந்தமான பிரச்சினை ஏற்படலாம். தண்ணீர் அதிகமாகப் பருகவும். கடன்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3
 

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டிய நாள். பழைய நண்பர் மூலம் வியாபாரத்தில் அனுகூலப் பலன் கிடைக்கப்பெறுவீர்கள். வாகனத்தில் வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். அதுவும் இரவில். உங்கள் துணை சுய நலமாக நடக்க கூடும். இதனால், நீங்க கோபம்பட வாய்ப்புள்ளது. தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

எந்த செயல்களையும் விரைந்து ஆற்றுவீர்கள். சிலருக்கு, பணியிடத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது. அதாவது, வேலை சம்பந்தமாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பீர்கள். பணவரவு அற்புதமாக இருக்கும். வியாபாரத்திலும் லாபம் நீங்க எதிர்பார்த்தைவிட இரட்டிப்பாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி விளையாடும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

திடீர் பயணத்தால் அனுகூலப் பலன் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக அமையும். அதேபோல், மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். பணிச்சுமை காணப்படும், திட்டமிடல் அவசியம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. எனவே, அனாவசிய செலவுகளை தவிர்த்துடுங்கள். வியாபாரம் சுமாராகவே இருக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் பொறுமையை சோதிக்கும் நாள்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

எந்த செயலிலும் தடை ஏற்படும். வெற்றியை அடைய முறையான திட்டமிட வேண்டும். பணியிடத்தில் தேவையில்லாத பேச்சை குறைத்துக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், ஆப்பு உங்களுக்க தான். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க முயற்சி செய்யுங்கள். இது திருமண வாழ்க்கையில் நெருக்கத்தை உண்டாக்கும். பூர்வீக சொத்து மூலமாக எதிர்பாராத பணவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [20.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்