Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Dhanusu : தனுசு குருவின் பார்வையால் எதாவது நன்மை கிடைக்குமா…!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 18:30 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Dhanusu : தனுசு குருவின் பார்வையால் எதாவது நன்மை கிடைக்குமா…!Representative Image.

ஞானங்களில் வல்லவராகத் திகழும் தனுசு ராசிக்காரரே இந்த 2022 புரட்டாசி மாதம் ராசியின் அதிபதி குரு பகவான் 4 ஆம் வீட்டில் இருப்பதால் ஏற்படும் பலன் பற்றி அறிய வேண்டுமா... உங்களுக்கு இந்த பதிவு இந்த ஒரு மாதம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி எடுத்துரைக்கும்.

தனுசு புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Dhanusu) 

பொது பலன்: 

உங்கள் ராசியின் அதிபதி குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருப்பது சிறப்பாகும். தன ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான்  சிறப்பான பண வரவு அளிப்பார். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதன் மற்றும் சூரியன் குரு பார்வையில் இருப்பதால் நல்ல பொருளாதாரம் மாற்றம் உண்டு.  

குடும்ப  வாழ்க்கை: 

கணவன் மனைவி உறவில் பிரச்சனை இல்லை, குடும்பத்தில் பேச்சின் மூலம் சிறிய பிரச்சனை வரலாம். தந்தை வழி சொந்தத்துடன் நல்ல உறவு உருவாகும். 5 இல் இராகு இருப்பதால் பூர்வீக சொத்துகளில் சில பிரச்சனை அளிக்கும். 6 மற்றும் 7 இல் செவ்வாய் இருப்பதால் வீட்டில் சிறிய சண்டைகள் வரலாம். திருமண பாக்கியம் உண்டு. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். 

தொழில்: 

கிரக நிலையின் சாதக பார்வை தொழிலில் நல்ல முன்னேற்றம் அளிக்கும். நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் கௌரவ பதவி கிடைக்கும். சனி பகவான் நல்ல பண வரவு அளிக்கும். வண்டி அல்லது வீடு வாங்க சரியான நேரம் ஆகும். 8 இல் குரு பார்வை இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை செல்லும். சிறப்பான பணப்பரிவர்த்தனை இருக்கும். 

உடல்நலம்: 

ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நலமான உடல்நலம் சிறப்பாக பணியாற்ற தூண்டும். மனம் தெளிவாக இருக்கும், நிதானமாக செயல்படுவீர்.

சந்திராஷ்டமம்:

செப்டம்பர்  20, 21, 22  & அக்டோபர்  17


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்