Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 05 ஆம் நாளுக்கான [17 பிப்ரவரி 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். குறிப்பாக, தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள். புதிய நபரின் சந்திப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்க திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பணயிழப்பிற்கு வாய்ப்புள்ளது. நண்பர்களால் குடும்பத்தில் பிரச்சனை தலைதூக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

முன்னேற்றகரமான நாளாக இருக்கும். எந்த காரியத்திலும் தைரியமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள். பணியிடத்தில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளால் அனுகூலம் கிட்டும். பாடாய் படுத்திய கடன் தொல்லையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரும். கூர்மையான ஆயுதங்கள் கையாளும்போது கவனம் தேவை. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

பணியிடத்தில் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து மூலமாக அனுகூலப் பலன் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டிய நாள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்க துணையுடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், பிரச்சனை உங்களுக்கே. சளி அல்லது இருமல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

தொட்டது துலங்கும் நாள். நெருக்கமானவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். எதிர்கள் நண்பர்களாவார்கள். சுபகாரியம் சார்ந்த விஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். திடீர் விருந்தினர் வருகையால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வழக்கு சம்பந்தமான விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். வியாபாரம் சீராக இருக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தாய்வழி பந்தங்களால் அலைச்சல் ஏற்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை வந்துபோகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிலருக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் ஏற்படும். துணையுடன் இருந்த மனக்கசப்பு அகலும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கப்பெறுவீர்கள். பத்திரம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். காப்பீடு போன்ற வகையில் எதிர்பாராத பண வரவு காணப்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காது. எதிர்பாலினத்தவரால் மனதை காயம்படுத்தும்படியான விஷயம் நிகழும். அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள். கவனத்தோடு இருங்கள். குடும்பத்தில் ஒருவருக்கு எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்படும். இதனால், கடன் வாங்கும் சூழ்நிலை வரும். நண்பர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. வார்த்தையில் கவனம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

நீண்ட நாட்களாக பொன், பொருள் வாங்கும் எண்ணம் ஈடேறும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பணியிடத்தில் உங்க திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த கடன் வசூலாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நல்ல செய்தி வரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

விலையுயர்ந்த பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை துடைத்து எடுக்க வேண்டிய நாள். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்க பணிகளை குறித்தநேரத்தில் நேரத்தில் முடிக்க முடியாது. துணையிடம் அவசரப்பட்டு வார்த்தை விட வேண்டாம். நிதனமாக நடந்துக்கொள்ள முயற்சியுங்கள். நிதிநிலைமை சுமாராக தான் இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. தனவரவு திருப்திகரமாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரம் சாதமாக இருக்கும். பெற்றோர்களால் நன்மை உண்டு. குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

மனதில் நினைத்தது நிறைவேறும் நாள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். அதேபோல், கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதால், பயணத்தின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக செல்லவும். எதிர்பாலினத்தவரிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது உத்தமம். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.. | 17 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

கனவில் கண்ட ஒருவரை நேரில் சந்திக்கலாம். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்துவந்த பிரச்சனை குறையும். பணியிடத்தில் சமயோசித புத்தியை பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் பணவரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு நின்ற காரியங்கள் நடந்து முடியும். வியாபாரிகள் முதலீடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். ஓய்வு

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்