Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Viruchigam : சுக்கிரனின் நிலை விருச்சிகம் ராசிக்கு நன்மை அளிக்குமா..?

Manoj Krishnamoorthi September 14, 2022 & 17:50 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Viruchigam : சுக்கிரனின் நிலை விருச்சிகம் ராசிக்கு நன்மை அளிக்குமா..?Representative Image.

எந்த நிலையிலும் நீதி நிலை மாறாமல் கண்ணியமாக இருக்கும் விருச்சிக ராசிக்காரரே  உங்களுக்கு புரட்டாசி மாதத்தில் ராசியை ராசியின் அதிபதி செவ்வாய் பார்ப்பதும் 3 ஆம் வீட்டில் சனி விபரீத ராஜ யோகம் கொள்வது பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவு சரியான தீர்வாகும். 

விருச்சிகம் புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Viruchigam) 

பொது பலன்: 

உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் விருச்சிக ராசியை பார்ப்பது சிறப்பான காலமாக இருக்கும். சனி பகவானின் பார்வை தொழிலில் நல்ல முன்னேற்றம் அளிக்கும். ஆன்மீக பயணம் உண்டு. வருமானம் உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

குடும்ப  வாழ்க்கை: 

திருமண பந்தத்தில் வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. சுக்கிரன் 10 இடத்தில் இருப்பது குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும்.  நட்பு வட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும், உறவினர் மத்தியில் உங்கள் மீது மதிப்பு உருவாகும். உறவினர் மூலம் நல்ல ஆதாயம் உண்டு. 

தொழில்: 

குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டு. பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சனியின் பார்வை புதிய முயற்சிகளை மிகப்பெரிய வெற்றி அளிக்கும்.   11 ஆம் வீட்டில் இருக்கும் சூரியன் தொழிலில் நல்ல மாற்றம் அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பாக செயல்படுவர், கல்வியில் பாராட்டு கிடைக்கும். இராகு பகவானின் பார்வை வெளியூர் வியாபாரம் அளிப்பார். வருமானம் உயரும்.

உடல்நலம்: 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலத்தில் எந்த பிரச்சனை இருக்காது, சிறப்பான ஆரோக்கியம் உண்டு. மனம் உற்சாகமாக இருக்கும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 18, 19, 20 & அக்டோபர் 15, 16

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்