Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Kadagam : புரட்டாசி மாதம் கடக ராசிக்கு நிம்மதி அளிக்குமா..!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 14:10 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Kadagam : புரட்டாசி மாதம் கடக ராசிக்கு நிம்மதி அளிக்குமா..!Representative Image.

கனிவான குணத்தால் அனைவரையும் நட்பு வட்டாரத்தில் வைத்து கொள்ளும் கடக ராசிக்காரரே 2022 புரட்டாசி மாதம் முதலில் 2 இல் இருந்த புதன் பின் 3 இல் சூரியன் உடன் சேர்ந்திருப்பது, 4 இல் கேது, 9 இல் குரு, 10 இல்  இராகு, 11 இல் செவ்வாய் இருப்பது சுப பலன் அளிக்குமா...? இல்லை கவனமாக இருக்க வேண்டுமா..? என்பதை பற்றி அறிய இந்த பதிவை பின்பற்றவும். 

கடகம்  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Kadagam) 

பொது பலன்: 

குருவின் பார்வை கடக ராசியில் இருப்பது ஒரு வகையில் நல்ல பலன் அளிக்கும். கேது பகவானின் நிலை உங்களுக்கு சில மன உளைச்சலை அளிக்கும். செலவுகள் அதிகரிக்கும். 9 இல் குரு இருப்பதால் சனியின் தாக்கத்தை குறைக்கும். 

குடும்ப  வாழ்க்கை: 

7 ஆம் வீட்டில் இருக்கும் சனி பகவான் இல்லற வாழ்வில் சிறிய சஞ்சலங்களை அளிப்பார். சகோதரர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக வழியில் நல்ல தகவல் கிடைக்கும். 9 இல் குரு இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

தொழில்: 

சுக்கிரன் நிலை ஓரளவு நன்றாக இருப்பதாலும் புதனின் உச்சம் தொழிலில் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக மாற்ற வழி செய்யும். பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகரிக்கும்.  4 ஆம் வீட்டில் இருக்கும் கேது உங்களுக்கு செலவு வைக்கும், நிதானமாக செலவு செய்ய வேண்டும். கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், எதிர்பார்க்காத முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். 

உடல்நலம்:

சிறப்பான ஆரோக்கியம் இருக்கும்  ஆனால் 7 ஆம் வீட்டில் சனி இருப்பதால் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 19, 20, 21

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்