Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Kanni : புதன் ஆட்சி கொள்வதால் கன்னி ராசிக்கு நன்மையா…?

Manoj Krishnamoorthi September 14, 2022 & 16:00 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Kanni : புதன் ஆட்சி கொள்வதால் கன்னி ராசிக்கு நன்மையா…?Representative Image.

இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரரான கன்னி ராசிக்காரரே 2022 புரட்டாசி மாதம் புதனின் உச்சம் கொள்வதால் என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

கன்னி  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Kanni) 

பொது பலன்: 

உங்கள் ராசியின் அதிபதி புதன் உச்சம் கொண்டு ஆட்சி அமைப்பதால் தொழில் ஸ்தானத்தை நன்றாக உயர்த்தும், சுய தொழில் செய்பவர்கள் பெரிய செய்வதைத் தவிர்ப்பது நஷ்டத்தைக் குறைக்கும். உங்களுக்கு அதிகமான செலவு இருக்கும். குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. 

குடும்ப  வாழ்க்கை: 

2 இல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறிய சண்டைகள் வரலாம், பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சகோதர வழியில் நன்மைகள் உண்டு.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7 இல் இருக்கும் திருமண வாழ்வை அளிக்கும். தாய் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். 

தொழில்: 

புதனின் ஆதிக்கம் இந்த மாதம் அதிகமாக இருப்பதால் தொழிலில் பொற்காலமாக இருக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழிலில் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். கையில் போதுமான பண வரவு உண்டு. 8 இல் இருக்கும் இராகு சனியின் பார்வையில் இருப்பதால் பணத்தை கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.  

உடல்நலம்: 

சனியின் பார்வை 2 ஆம் வீட்டில் இருப்பது ஆரோக்கியத்தில் தொல்லைகள் அளிக்கும். உணவு பழக்கத்தில் கவனம் காட்ட வேண்டும், வயிறு சார்ந்த பிரச்சனைகள் வரும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 23, 24, 25

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்