Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,912.78
571.70sensex(0.74%)
நிஃப்டி23,689.30
151.45sensex(0.64%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - கவனம்

விருச்சிகம் - வெற்றி

தனுசு - தனவரவு

மகரம் - செலவு

கும்பம் - நிதானம்

மீனம் - வருத்தம்

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [20.12.2022]

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

மகிழ்ச்சியான நாள். எந்த காரியத்திலும் உணர்ச்சிவசப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பணவருகையால் பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான தவிர்ப்பு, குழப்பமான சூழல் நிலவும். தியானம் செய்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

தொடர் முயற்சி மூலம் வெற்றியை பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு சமூகத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் காரணமாக, ஊக்கத் தொகை அல்லது சலுகை வகையில் இன்று பண வரவு ஏற்படும். தொழிலில் முதலீடு செய்ய விரும்பினால், எல்லா கோணத்திலும் ஆராய வேண்டியது அவசியம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனை பெற கிடைக்கும் சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். துணையுடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். காப்பீடு போன்ற வகையில் எதிர்பாராத பண வரவு காணப்படும்.எனவே, தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தனவரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரி உணவை தவிர்க்க வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து நீங்க எதிர்ப்பார்த்தைவிட அதிகமான ஆதரவு கிடைக்கும். அதேபோல், பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள். கவனத்தோடு இருங்கள். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8
 

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை துடைத்து எடுக்க வேண்டிய நாள். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்க பணிகளை குறித்தநேரத்தில் நேரத்தில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். துணையிடம் அவசரப்பட்டு வார்த்தை விட வேண்டாம். நிதனமாக நடந்துக்கொள்ள முயற்சியுங்கள். நிதிநிலைமை சுமாராக தான் இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கண் சம்பந்தமாக பிரச்சினைகள் காணப்படும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 20.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். குறிப்பாக, தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. புதிய நபரின் சந்திப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்க திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது. எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்