Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Simmam : சிம்ம ராசிக்கு  இந்த புரட்டாசி மாதம் மாபெரும் அதிர்ஷ்டமா....!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 15:15 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Simmam : சிம்ம ராசிக்கு  இந்த புரட்டாசி மாதம் மாபெரும் அதிர்ஷ்டமா....!Representative Image.

கொடுத்த வாக்கை காக்க எந்த கஷ்டம் வந்தாலும் சமாளித்து காட்டும் காட்டும் உறுதி கொண்ட சிம்ம ராசிக்காரரே 2022 புரட்டாசி மாதம் 2 இல் சூரியன்,  3 இல் கேது, 4 ஆம் வீட்டில் குரு பார்வை, 8 இல் குரு ஆட்சி, 9 இல் இராகு  இருப்பது என்ன பலன் அளிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு சரியான தேர்வு ஆகும். 

சிம்மம்  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Simmam) 

பொது பலன்:

சனி ஆறாம் வீட்டில் இருப்பது ராஜ யோகம் உண்டு. சுற்றத்தார் மத்தியில் நல்ல பெயர் புகழ் அதிகரிக்கும், கௌரவம் கிடைக்கும்.  சிறப்பான வருமானம் உண்டு, தொழில் அருமையான வளர்ச்சி இருக்கும். குடும்ப வாழ்க்கை அமைதி இருக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் அமைதி இருக்கும். பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பீர், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. இரத்த சொந்தத்தில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை கணவன் மனைவி உறவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும். சொந்தத்தில் உங்கள் மதிப்பு கூடும். 

தொழில்: 

சூரியன் மீது குரு பார்வை இருப்பது வருமானம் உயரும். 8 இல் குருவின் ஆட்சி இருப்பது நிலுவை தொகையை அளிக்கும். சுப செலவு உண்டு. அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு கிடைக்கும். புதன் மற்றும் சுக்கிரனின் சாதக நிலை தொழிலில் நல்ல முன்னேற்றம் அளிக்கும்.  மாணவர்களுக்கு நல்ல காலமாக இந்த மாதம் அமையும். ஆறாம் வீட்டில் இருக்கும் சனி தொழில் போட்டிகளைக் கடக்க உதவியாக இருக்கும். 

உடல்நலம்: 

அதிகமான உழைப்பு உடல் சோர்வை அளிக்கும், ஓய்வு தேவைப்படும். மனம் தெளிவாக இருக்கும், தீர்க்கமான முடிவு உண்டு.  

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 20, 21, 22, 23 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்