Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Kumbam : புரட்டாசி மாதம் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்..?

Manoj Krishnamoorthi September 16, 2022 & 10:30 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Kumbam : புரட்டாசி மாதம் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்..?Representative Image.

கடினமான சூழ்நிலையிலும் திடமான முடிவு எடுக்கும் சாமர்த்தியம் கொண்ட கும்ப ராசிக்காரரே விரைய சனியால் 2022 புரட்டாசி மாதம் நலமான வாழ்க்கை அளிக்குமா? என்ன பலன் கிடைக்கும் என்ற ஐயத்துக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். 

கும்பம் புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Kumbam) 

பொது பலன்: 

சனி பகவானின் நிலை உங்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அளிக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியில் ஒரு வளர்ச்சி உண்டு.

குடும்ப வாழ்க்கை: 

கணவன் மனைவி உறவி சண்டைகள் வந்து மறையும், பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கை துணையின் மூலம் பொருளாதார வரவு இருக்கும்.  3 இல் இராகு இருப்பதால் உடன்பிறப்புடன் மனவருத்தம் உண்டாகும். திருமணமாகதவர்களுக்கு திருமணம் குறித்த தகவல் ஏற்படும். வீட்டில் அனுசரணையாக இருக்க வேண்டும்.

தொழில்: 

தொழிலில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சனி மற்றும் குருவின் பார்வை 3 இல் இருப்பதால் நல்ல பண வரவு இருக்கும் ஆனால் செலவுகள் அதிகமாக வரும்.  பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வீடு போன்ற சொத்துகள் வாங்க முடியும். பயணம் செய்வதைக் குறைத்து கொள்ளவும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலை அழுத்தம் ஏற்படும். சுய தொழிலில் ஒரு நல்ல இடம் கிடைக்கும். கல்வியில் மந்தமான நிலை இருக்கும். 

உடல்நலம்:

மருத்துவம் சிகிச்சை ஏற்படும், ஆரோக்கியத்தில் குறை ஏற்படும். ஒரு சிலருக்கு குடும்பத்தினர் மூலம் மருத்துவ செலவு ஏற்படும். உணவு பழக்கத்தில் அதிக கவனம் வேண்டும்.  

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 24, 25, 26 

 

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்