Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Kumbam : கும்ப ராசிக்காரர்களே விரைய சனி வருவதால் என்ன பலன்...?

Manoj Krishnamoorthi November 12, 2022 & 17:30 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Kumbam :  கும்ப ராசிக்காரர்களே விரைய சனி வருவதால் என்ன பலன்...?Representative Image.

கும்ப ராசிக்காரரே 2022 கார்த்திகை மாதத்தில் 2 இல் குரு, 3 இல் இராகு, 4 இல் செவ்வாய் வக்கிரம், 9 இல் கேது, 12 இல் சனி சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 10 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை கார்த்திகை  மாதம் 17  தேதி அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி 11 ஆம் வீட்டில்  பெயர்ச்சி செய்கிறது. இதனால் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு  கார்த்திகை மாதம் என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறியலாம்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- கும்பம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Kumbam)

Karthigai Matha Rasi Palan 2022 Kumbam :  கும்ப ராசிக்காரர்களே விரைய சனி வருவதால் என்ன பலன்...?Representative Image

கும்பம் 

பொது பலன்:

தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் சாதகமாக இருப்பதால் தொழிலிலிருந்த சிக்கல் அகலும். ஆனால் ராசிநாதன் சனி பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவைக் கட்டுப்படுத்த முடியாது. 

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப ஸ்தானத்தில் குரு வக்கிர நிவர்த்தி ஆகிறது, எனவே வீட்டில் இருக்கும் வேறுபாடு மறையும். வீட்டில் உங்கள் பேச்சு ,மதிக்கப்படும்.  இல்லற வாழ்வில் புரிதல் அதிகமாகும்.  குழந்தை பாக்கியம் உண்டு. நிலம் சார்ந்த விஷயத்தின் மூலம் அனுகூலம் உண்டு, வீடு மனை போன்ற வாங்கலாம். 

தொழில்: 

தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் எதிர்பார்த்த நபர்களுக்கு நல்ல மாற்றம் உண்டு. குருவின் பார்வை 10 இல் இருப்பதால் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.  

விரைய ஸ்தானத்தில் சனி இருப்பதால் பணியில் பொறுமையாக இருக்க வேண்டும். 3 இல் இராகு இருப்பது நிலுவை வேலையை முடிக்க வைக்கும்.  நிதி பிரச்சனை சரியாகும்.

உடல்நலம்:

ஆரோக்கியம் மேம்படும். ஆனால் 12 இல் இருக்கும் சனி அவ்வப்போது சில மன உளைச்சல் அளிக்கும், மற்றவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர்  18, 19  & டிசம்பர் 15 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்