Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Magaram : சனியின் ஆட்சி ஸ்தானம் மகர ராசிக்கு என்ன பலன் அளிக்கும்..!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 19:00 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Magaram : சனியின் ஆட்சி ஸ்தானம் மகர ராசிக்கு என்ன பலன் அளிக்கும்..!Representative Image.

கலகலப்பாக வாழ்க்கை வாழும் குணம் கொண்ட மகர ராசிக்காரரே உங்களுக்கு 2022 புரட்டாசி மாதத்தில்  புதன் கன்னியில் உச்சம் கொள்வது சாதகமா... என்பதை பற்றி அறிய வேண்டுமா...? இந்த பதிவை மேலும் பின்தொடர்ந்து படிக்கவும்.

மகரம் புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Magaram) 

பொது பலன்: 

உங்கள் ராசியில் சனி பகவான் ஆட்சி கொள்வதால் இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். சாதாரணமாக செய்யும் செயல் அசுர வெற்றி கொடுக்கும். நல்ல பண வரவு உண்டு. நண்பர்கள் மூலம் சந்தோஷம் பிறக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குடும்ப  வாழ்க்கை: 

காதல் வாழ்க்கை திருமணமாக மாற்ற முயற்சி செய்தால் நன்மை அளிக்கும். 7 ஆம் வீட்டில் குரு பார்வை இருப்பதால் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள் மூலம் சந்தோஷம் பிறக்கும். சொந்தத்தில் சிறிய இடையூறு பிறக்கும், பொறுமையாக இருப்பது நன்மை ஆகும். செவ்வாய் பகவானின் பார்வை பூர்விக சொத்து அளிக்கும். குருவின் பார்வை 7 இல் இருப்பதால் திருமண பாக்கியம் உண்டு.

தொழில்: 

குருவின் சாதகமான பார்வை  முக்கிய பொறுப்புகள் அளிக்கும், வேலைச் சுமை அதிகமாகும். கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும்.  பண வரவு இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு சாதகமாக உள்ளது.  சுய தொழிலில் எதிர்பார்த்த நிலை கிடைக்கும். வண்டி வாகனம் செலவு வைக்கும். 

உடல்நலம்: 

தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை, மருத்துவர் ஆலோசனை நன்மை அளிக்கும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 22, 23, 24  

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்