Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - புதன் | Tomorrow Rasi Palan in Tamil | 21.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
நாளைய ராசிபலன் - புதன் | Tomorrow Rasi Palan in Tamil | 21.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 06 ஆம் நாளுக்கான [21 ஜூன் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும். பொறுமை இழந்து காணப்படுவீர்கள். எதிர்பார்த்தது ஏமாற்றத்தை தரும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. துணையுடன் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். பயணத்தின்போது பண இழப்பு நேரலாம். செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளி உணவுகளை தவிர்க்கவும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சாதகமான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். திறமை வெளிபடும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி பாராட்டை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருக்காது. நண்பர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எதிர்பாராத பண வரவு உண்டு. வியாபாரத்தில் வருமானம் அதிகரித்து காணப்படும். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிலும் பொறுமை தேவைப்படும் நாள். அவசர புத்தியால் சில தடை, தாமத்தை சந்திப்பீர்கள். சக பணியாளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பு. பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் புதிய நபரால் மாற்றம் வரும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. குடும்பத்தினரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். பணியிடத்தில் கொடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையுடன் தகவல்களை பரிமாறும்போது வார்த்தையில் கவனம் தேவை. நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணப்பற்றாக்குறை காணப்படும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வீண் பிரச்சனைகளை தவிர்க்க பக்குவமான அணுகுமுறை வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். துணையின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போகலாம். பணவரவு குறைந்து காணப்படும். அனாவசிய செலவை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. கண் சம்பந்தமான விஷயங்களில் கவனம். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவு எடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். பெரியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. துணையுடன் வெளிப்படையான பேச இது சரியான நேரம் அல்ல. செலவுகள் அதிகரித்து காணப்படும். கடன் வாங்கவும் வாய்ப்புண்டு. பற்களில் உபாதைகள் ஏற்படும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அதிர்ஷ்டகரமான நாள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. கடினமான பணிகளும் எளிதில் முடியும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் நல்லிணக்கம் ஏற்படும். எதிர்பாராத பண வரவால் வங்கியிருப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் குழப்பம் நீங்கி, மன அமைதி கிடைக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். கனவுகள் நிறைவேறும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உண்டு. கடின உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

துணையின் வார்த்தை கவனித்து பேசுவது நல்லது. பணியில் கவனக் குறைவால் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். நன்மையை பெற பொறுமை தேவை. அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். உறவினர்கள் வழியில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். முதுகுவலி வரலாம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டிய நாள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. கவனம் தேவை. துணையிடம் கோபப்படுவதை தவிர்க்கவும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். சில காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். கடன் வாங்க வேண்டாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டவும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தைரியமும் உறுதியும் நிறைந்து காணப்படும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்னோன்யம் அதிகரித்து காணப்படும். பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். தொழிலில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாகன பயணத்தின் போது நிதானம் தேவை. தந்தை வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நிதி நிலைமை சிறப்பு. நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்தில் கலந்து கொள்வீர்கள். தம்பதிக்குள் அன்பும், அக்கறையும் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்புடம் இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் வரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் அற்புதம். புதிய முயற்சி வெற்றி. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்