Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: யதார்த்தமாக செயல்பட்டால் அனுகூலப் பலன்களை பெறலாம்... 15.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 14, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan: யதார்த்தமாக செயல்பட்டால் அனுகூலப் பலன்களை பெறலாம்... 15.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

நாளைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 10.09.2022)

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

நாளைய தினம் தொழில் சம்பந்தமாக நிண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  

கவலைப்படுவதையும், உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்து மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். வேலைபளு அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். இன்றைய நாள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெற்றி பெறலாம். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும்.  

சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுபம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்கலாம். எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவர். 

சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். இல்லற வாழ்வில் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

எதிலும் பொறுமையுடன் செயல்படுவது அனுகூலப் பலன்களை பெற்று தரும். தேவையற்ற அலைச்சல் காரணமாக டென்ஷன் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் அக்கறை, அன்பு, பாசம் அதிகரித்து காணப்படும். கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் யதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். எதையும் எதிர்பார்த்து செயல்படாதீர்கள். பெரிய ஏமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விட்டுக்கொடுத்து போவது நல்லது.

செலவுகள் அதிகரித்துக் காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். ஆரோக்கியம் சிறப்பாக இல்லை. எனவே, அதிக கவனம் தேவை. ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள் செலவுகள் வரவுக்கு மீறி அதிகரிக்கும். எனவே, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணியிடத்தில் சகபணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

துணையுடன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சுமாராக உள்ளது. பணவரவும் திருப்திகரமானதாக இருக்காது. ஆக மொத்தம் கவலைகள் நிறைந்த நாள். கவலை! 

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்