Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Thulam : சுக்கிரனின் நிலை துலாம் ராசிக்கு நன்மை அளிக்குமா..?

Manoj Krishnamoorthi September 14, 2022 & 16:50 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Thulam : சுக்கிரனின் நிலை துலாம் ராசிக்கு நன்மை அளிக்குமா..?Representative Image.

செல்லும் இடமெல்லாம் நட்பு பாராட்டு குணம் கொண்ட துலாம் ராசிக்காரரே 2022 புரட்டாசி மாதம் சுக்கிரன் சிம்மத்தில், சூரியன் மற்றும் புதன் கன்னியில் இருப்பதால் ஏற்படும் பலன் பற்றி விரிவாக அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

துலாம் புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Thulam) 

பொது பலன்: 

உங்கள் ராசிக்கு அதிகமான பயணம் இருக்கும். உடல் அலைச்சல் இருக்கும். ராசியின் அதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது சிறப்பான பலன் அளிக்கும். அருமையான தொழில் வளம் உண்டு. நல்ல வருமானம் உண்டு, சுப செலவு இருக்கும். கல்வி நல்ல முன்னேற்றம் உண்டு. 

குடும்ப  வாழ்க்கை: 

குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 7 இல் இராகு இருப்பதால் கணவன் மனைவி உறவில் கருத்து மோதல் ஏற்படும். நண்பர்களுடன் சிறிய சண்டைகள் வரும். 4 இல் சனி இருப்பதால் தாய் வழி சொந்தம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.  குடும்ப செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.

தொழில்: 

கணமான பண வரவு உண்டு. கல்வி ரீதியாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருக்கும். தொழில் ஸ்தானம் நல்ல வளர்ச்சி அளிக்கும், பதவி உயர்வு கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல பலன் அளிக்கும். போக்குவரத்து தொழில் நல்ல லாபம் கொடுக்கும்.  7 இல் இராகு இருப்பதால் கூட்டு தொழிலில் சிறிய சிரமம் ஏற்படும். நல்ல பண வரவு உண்டு.  

உடல்நலம்: 

உடல்நலத்தில் இருந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். உங்கள் ராசியில் கேது இருப்பதால் நிதானமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 25, 26, 27

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்