Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பணமழையில் ஜொலிக்கப் போகும் அந்த ராசிக்காரங்க நீங்க தானா..? அப்றம் எதுக்கும் வருத்தம்…. 15.09.2022 ராசிபலன்!

Gowthami Subramani September 14, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan: பணமழையில் ஜொலிக்கப் போகும் அந்த ராசிக்காரங்க நீங்க தானா..? அப்றம் எதுக்கும் வருத்தம்…. 15.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை (15.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி அறிய வேண்டுமா..? இந்த பதிவில் துலாம் ராசி முதல் கன்னி ராசி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்!

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று வெற்றியடையக் கூடிய சிறப்பான நாள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சி காணப்படுவதுடன், பணியில் திருப்தி அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய நாளாக அமைகிறது. எல்லோரிடமும் அன்பு காட்டுவீர்கள். துணையோடு அன்புடன் இருப்பீர்கள். நல்ல பலன்களைப் பெறக் கூடிய நாள்.

https://lh4.googleusercontent.com/SGr4ScDd98YmUEl1fiXunxW1fsBONQ7IO8eB2HmZc1ytv4HvLflBioHKGSS9PTfsyj9QxyerO8MaYXbN10HO6QqV2mSjMC6gEHGBHvyqrlJigijJy8_UFrF-G_YObSerEbb7tEFDMOqZgPUEU9cw5l5mmysjSwnruTGKwpY6rpwgc0ZfCBN4dYDosA

பணவரவு திருப்தியாக அமையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி மேல் வெற்றி உண்டாகும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கக் கூடியதாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். இன்று உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். பணிகளை எளிதாக செய்வீர்கள்.  துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

https://lh3.googleusercontent.com/6bE9W3sJcIDMbrs04Zaw4NgeqYuedZXFY_U_LaVjjDiTgwfjjVVXOvYk1JtQhmXn152TVULyKI_nDPhziCuvgvSp6EFTsi9YcX2mGCmh8OZcsw4uqo-JOuav9hsiYsofTAMegHog6PdbPjEg_K80XwjsWCmj8f9sl4_r11Yks27omIEK2mW81kDGIg

பணப்புழக்கம் நன்றாக உள்ளது. எதிர்பாராத வகையில், பண வரவு கிடைக்கும். இன்று ஆரோக்கியமான நாளாக அமையும். பணவரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்குப் பொறுமை மிக அதிகம் தேவை. சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நேர்மறை எண்ணங்களின் மூலம் சாதகமான பலன்களைப் பெற முடியும். குடும்பத்தில், சண்டை சச்சரவுகள் உருவாகலாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், சற்று பொறுமையாக இருப்பது நல்லது. எதிலும் அவசரம் செய்யக் கூடாது.

https://lh6.googleusercontent.com/qTVEbbXELhBMtsRMOciOYM4GGOecvGjnUDTrYzbEzCXtdiLJKFEAr47upvdDPdZUMQXbdx5v_5gm5laz-1ZHew8Hkum8ZiSqgeG9JJtGHlRowNx-A14tTBrUJh4f9lgCE7l1K-54pf8Cnfzq0i97muMgZLQGbZxXSdaUuxdG5F2097bVuzEDYd7HZw

இன்று கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. தேவைகளை சந்திக்க கடன்கள் வாங்குவீர்கள். இது போன்ற மனக் கவலை காரணமாக தலைவலி ஏற்படும். தியானம் செய்வதன் மூலம், ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க முடியும்..செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று உங்கள் காரியங்களை மேற்கொள்வதில் சற்று தடைகள் உண்டாகலாம். இதனால், யதார்த்தமாக செயல்படுவது நல்லது. உடனிருப்பவரை அனுசரித்து செல்ல வேண்டும். இதன் மூலம் திறமையாக பணியாற்ற முடியும். செய்யும் செயலில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், நம் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நிகழலாம்.

https://lh3.googleusercontent.com/6ymZCtrn73cQPvPoM_iPDpu79pHs044x4D3cyzfMqFfbZf6FrwYSaCyfmIFYdr_nXSVqYaFRG_eQCuQe73KWhV-WyRc5n1e0zRb3HAyr3yqXZD7fywcmkmKSJOpTDEuMIjyxMZaom74zbUphb7020nhOSZhKWAjzGfac2urD4ceDVevJoiAoU700ug

நிதி நிலைமை சிறிது கவலை தருபவையாக உள்ளன. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றக் கூடிய நாளாகும். சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியவையாக அமையும். வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான சிறப்பான நாளாக அமைகிறது. உங்களது பணியில் திருப்தி அடைவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு காணப்பட்டு நல்லுறவை மேம்படுத்துவீர்கள்.

https://lh4.googleusercontent.com/O28xOFjKZgBV55oFbgFZHKW6lgJBMKphm-Hy3ff5_y5H7ydB_CKOsdG1Eek6oox72mseZVmORHvZscrQlPkXVraq__0k61OCF4sg46rVHUnuJavEyqBpxPVpMi_V6XAWrVCXS752STU1nxmI8i0QliIiPnctpmQhQK8N-mkZ8FvDkit_fOe-_m9MAQ

இன்று உங்களின் நிதி நிலைமை திருப்திகரமாக அமைவதுடன், நன்கு பணம் சம்பாதிக்கக் கூடிய நாளாக அமைகிறது. இன்று அதிர்ஷ்டமான நாளாகும்.. வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

மிதமான பலன்களையே தரக் கூடிய நாளாக அமைகிறது. எந்த விஷயத்திற்கும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமை காப்பது நல்லது. இன்று நண்பர்கள் கூட விரோதிகளாக மாற வாய்ப்பு உள்ளது. உங்களுக்கான கடமைகள் அதிகமாகக் காணப்படும். ஓய்வின்றி உழைக்கும் சூழ்நிலை வரலாம். பணியில் சிறந்த யுக்தியைக் கையாள வேண்டும். உங்கள் துணையாருடன் வீண் விவாதம் வேண்டாம். இதனால், உறவு பாதிக்கப்படுவதுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.

https://lh4.googleusercontent.com/BGviQPd-PWBaEfCUcUp8yeStxUohDslmBQ75-eN_4SbqOdXt8m9INTxFXndTtQkABdWolkqZHDLBuXZR38WLeVC4_0zoxSDDQ8KBKX9nZRlSM-KYIbfh2qKrJ7UhRbk3LlY7-tzuVMFDVMuqdASyKPQnfTgudGkx-3ZGjLsC7BeZopgOevSEK0vugA

இன்று பண வரவு, செலவு இரண்டும் சமநிலையில் இருக்கும். எனினும், தேவையற்ற செலவைக் குறைத்து சேமிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடமை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்