Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Magaram : ஸ்டார்டிங் நல்லதான்யா இருக்கு... ஆனால் முடிவு எப்படி? மகரம் கார்த்திகை 2022 பலன்..!

Manoj Krishnamoorthi November 11, 2022 & 17:30 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Magaram : ஸ்டார்டிங் நல்லதான்யா இருக்கு... ஆனால் முடிவு எப்படி? மகரம் கார்த்திகை 2022 பலன்..!Representative Image.

மகர ராசிக்காரரே 2022 கார்த்திகை மாதத்தில் ஜென்மத்தில் சனி ஆட்சி பலம் இருக்கிறது. மேலும் 3இல் குரு,  4 இல் இராகு, 5 இல் செவ்வாய் வக்கிரம், 10 இல் கேது, சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 11 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை கார்த்திகை  மாதம் 17  தேதி அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி 12 ஆம் வீட்டில்  பெயர்ச்சி செய்கிறது. இதனால்  கார்த்திகை மாதம் மகரத்திற்கு என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறியலாம்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- மகரம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Magaram)

Karthigai Matha Rasi Palan 2022 Magaram : ஸ்டார்டிங் நல்லதான்யா இருக்கு... ஆனால் முடிவு எப்படி? மகரம் கார்த்திகை 2022 பலன்..!Representative Image

மகரம் 

பொது பலன்:

உங்களுக்கு மாதத்தின் முற்பகுதி இருக்கும் சாதக நிலை, பிற்பகுதியில் அமையாது.  தொழிலில் அழுத்தம் ஏற்படும். இடமாற்றம் உண்டு. நிதி நிலையில் பாதிப்பு இல்லை. 

குடும்ப  வாழ்க்கை:

நண்பர்களின் உதவி பலமாக இருக்கும். நிலம் சார்ந்த விஷயத்தில் சாதகமான பலன் உண்டு, வீடு மனை வாங்கும் நிலை ஏற்படலாம்.  திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். சூரியன் 11 இல் இருப்பதால் போராட்டங்கள் இருந்தாலும் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும், தந்தை வழியில் ஆதாயம் உண்டு. 

தொழில்: 

சுக்கிரன் 11 ஆம் விட்டில் இருக்கும்போது வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஒருசிலருக்கு வேலையில் திடீரென நல்ல மாற்றம் உண்டு.  ஆனால் 12 ஆம் வீட்டில் சுக்கிரன் வரும்போது வேலையின் அழுத்தம் அதிகமாகும். கார்த்திகை மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் பொறுமை காப்பது நல்லது. நிதிநிலையில் பாதிப்பு இல்லை.  

உடல்நலம்:

சுக்கிரன் 12 இல் வருவதால் ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு அளிக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் பிரச்சனை உண்டாகலாம். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 13, 14, 15

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்