Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Kadagam : ஐப்பசியில் கடக ராசிக்கு தொழில் நல்லா இருக்கா.. இல்லையா...?

Manoj Krishnamoorthi October 11, 2022 & 17:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Kadagam : ஐப்பசியில் கடக ராசிக்கு தொழில் நல்லா இருக்கா.. இல்லையா...?Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பது கடக ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- கடகம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Kadagam)

பொது பலன்: 

குரு பகவன் பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமாகவும், தைரிய ஸ்தானத்தில் இருக்கும் புதன் சுக ஸ்தானத்தில் இருந்து பின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதும், தொழில் ஸ்தானத்தில் இராகு இருப்பதும் குடும்ப வாழ்வில் நிம்மதி அளித்து, சுமுகமாக எடுத்து செல்லும். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது ஆனால் புதிய முயற்சி சாதகமாகாது. 

குடும்ப  வாழ்க்கை: 

குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தினருக்காக அதிக அலைய வேண்டிய நிலை ஏற்படும். திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

தொழில்: 

செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.  புதிய வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  வெளிநாடு வணிகம் ஏற்படும்.  பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

உடல்நலம்: 

உடல்நலத்தில் உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். மனதில் உறுதி அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

சந்திராஷ்டமம்:

 நவம்பர் 1, 2, 3  

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்