Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

உங்க ராசிக்கான அதிபதி யார்? | Rasi Athipathi List in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உங்க ராசிக்கான அதிபதி யார்? | Rasi Athipathi List in TamilRepresentative Image.

ஜோதிடத்தில் கண்ணாக திகழ்வது ராசிகள் தான். மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பார். நவகிரங்களே நமது ராசியின் அதிபதிகளாக திகழ்கின்றனர். நவகிரங்களில் இருக்கும் 9 கிரகத்திற்கும் ஒரு ராசி வீடு உண்டு. சில கிரகத்திற்கு 2 வீடுகள் உள்ளன. நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு - கேது கிரகத்திற்கு மட்டும் வீடு கிடையாது. மாறாக அவர்கள் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாக கருதப்படுகிறது.

ஒரு கிரகமானது அதன் சொந்த வீட்டில் (ஆட்சி வீடு) இருந்தால், அந்த கிரகத்துக்கு சக்தி மூன்று மடங்காக இருக்கும். அதேபோல், ஒருசில கிரகங்களுக்கு வீடுகள் நீச வீடாகவும், உச்ச வீடாகவும் இருக்கும். அதாவது, உச்ச வீட்டில் இருக்கும்போது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் உச்ச பலமாக இருக்கும். அதுவே, நீச வீட்டில் இருக்கும்போது கிரகம் பலம் இழந்து காணப்படும். சரி வாங்க, 12 ராசிகளுக்கு உண்டான ராசி அதிபதிகள் பற்றி பார்க்கலாம். 

உங்க ராசிக்கான அதிபதி யார்? | Rasi Athipathi List in TamilRepresentative Image

ராசி அதிபதிகள்:

மேஷம் ராசி அதிபதி - செவ்வாய்

ரிஷபம் ராசி அதிபதி - சுக்கிரன்

மிதுனம் ராசி அதிபதி - புதன்

கடகம் ராசி அதிபதி - சந்திரன்

சிம்மம் ராசி அதிபதி - சூரியன்

கன்னி ராசி அதிபதி - புதன்

துலாம் ராசி அதிபதி - சுக்கிரன்

விருச்சிகம் ராசி அதிபதி - செவ்வாய்

தனுசு ராசி அதிபதி - குரு

மகரம் ராசி அதிபதி - சனி

கும்பம் ராசி அதிபதி - சனி

மீனம் ராசி அதிபதி - குரு  

உங்க ராசிக்கான அதிபதி யார்? | Rasi Athipathi List in TamilRepresentative Image

அதிபதி ஸ்தானம்:

✦ மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் ஆற்றல், நிலம், திறமை ஆகியவற்றின் காரகனாக விளங்குகிறார்.

✦ துலாம் மற்றும் ரிஷபம் ராசிக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரன் களத்திர காரகனாக விளங்குகிறார். 

✦ கன்னி மற்றும் மிதுனம் ராசிக்கு அதிபதியாக இருக்கும் புதன் பகவான் புத்தி, கல்வி காரகனாக விளங்குகிறார். 

✦ மீனம் மற்றும் தனுசு ராசிக்கு அதிபதியான குரு பகவான் புத்திர, தன ஸ்தானத்தின் காரகன் ஆவார். 

✦ கும்பம் மற்றும் மகரம் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சனிபகவான் தொழில், ஆயுள் காரனகனாக விளங்குகிறார். 

✦ கடக ராசிக்கு அதிபதியாக விளங்கும் சந்திர பகவான் மனம் மற்றும் தாய்க்கு காரகனாக இருக்கிறார்.

✦ சிம்ம ராசி அதிபதியான சூரியன் உடல் மற்றும் தந்தைக்கு காரகனாக விளங்குகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்