வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மிதுன ராசியினரே! எதையும் அதிபுத்திசாலிதனத்தோடு செயல்பட்டு சாதித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு நிர்வாக திறமையும், சாதுர்யமாக செயல்படும் ஆற்றலும் இயற்கையாகவே இருக்கும். விருப்பு, சிந்தனை, பேச்சு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் வெற்றியடைய வழிகாட்டுவதில் வள்ளவராக திகழ்பவர். எந்த காரியத்திலும் நிறந்தரமான ஈடுபாடு என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது. இதனால், உங்களை பற்றி மற்றவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. சில நேரங்களில் சந்தேகப்படுவதும், சஞ்சலப்படுவதும் உங்களுடைய பலவீனம்.
அஷ்டம சனியால் கடந்த இரண்டரை வருடங்களாக கவலை, பண நெருக்கடி, ஏமாற்றம், அவமானம், குடும்ப பிரச்சனை என பல வகையான இன்னகளை சந்தித்திருப்பீர்கள். வரதுவரட்டும், போரதுபோகட்டும் என்ற மனநிலைக்குஏற்ப பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. அதாவது குரு பகவான் உங்க ராசிக்கு 10வது வீட்டில் இருந்த குரு பகவான் தற்போது 11வது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், இந்த காலக்கட்டம் பல திருப்புமுனைகள் நிறைந்தவையாகவே இருக்கும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவனால் இழந்தவை மீண்டும் கிடைக்கும். மந்தமாகவே இருந்த தொழில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு அமோக வளர்ச்சி பெறும், எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் மழை கொட்டும். கடன் வாங்கி தொழில் செய்தவர்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு பணவரவு இருக்கும். இருப்பினும், கடன் கொடுப்பதை தவிர்க்க கொள்வது நல்லது. பணியிடத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் விலகி, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். மேலும், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக மனதை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் பலவகையான ஆதாயங்கள் ஏற்படும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. ரொம்ப நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்துவந்த வாக்குவாதங்கள், மனக்கஷ்டங்கள் விலகி நெருக்கம், பாசம், அன்பு அதிகரிக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மிதுன ராசியினருடைய பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் கைக்கூடி வரும். குடும்பத்தில் அடிக்கடி மங்களகரமான சுபநிகழ்வுகள் நடைபெறும். தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் மீண்டும் நிறைவேறும். நீண்ட நாட்களாக இழுத்தடித்த வழக்குப் பிரச்சனைகளில் சாதகமான சூழல் ஏற்படும்.
மேலும், குரு பகவான் உங்க ராசிக்கு 5 ஆம் பார்வையாக 3வது வீடான இளைய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், புத்தி ஸ்தானத்தை பார்வையிடுவதால், பயம், பதட்டம் விலகி தைரியம், பலத்தை கொடுப்பார். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர, சகோதரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குரு பெயர்ச்சிக்கு பிறகு நீங்க நினைத்தைவிட அதிகமான நற்பலன்களையே குரு பகவான் உங்களுக்கு கொடுக்கப்போகிறார். குரு பகவான் 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வைப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.
வருடம் முழுவதும் முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமாக செவ்வாய் மற்றும் குரு பகவானின் பரிபூரண அருள் கிட்டும்.
இதையும் படிங்க:
◆ மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்
◆ சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்
◆ விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்
வருடம் முழுவதும் முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமாக செவ்வாய் மற்றும் குரு பகவானின் பரிபூரண அருள் கிட்டும்.
இதையும் படிங்க:
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…