Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rishaba Rasi Palan October 2022 In Tamil : சுக்கிரனின் நிலை மாற்றத்தால் ரிஷப ராசிக்கு இப்படி மாற்றமா..!

Manoj Krishnamoorthi September 22, 2022 & 18:30 [IST]
Rishaba Rasi Palan October 2022 In Tamil : சுக்கிரனின் நிலை மாற்றத்தால் ரிஷப ராசிக்கு இப்படி மாற்றமா..! Representative Image.

ஆடம்பர எண்ணங்கள் கொண்ட ரிஷப ராசிக்காரரே உங்களுக்கு சுக்கிரன் புதன் மற்றும் சூரியனுடன் கன்னியில் இருப்பதால் அக்டோபர் மாதம் 2022 நன்மை அளிக்குமா..! இல்லை கவனமாக இருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அறிய இவ்வாசகத்தை தொடர்ந்து படிக்கவும். 

அக்டோபர் மாத ராசிபலன் 2022- ரிஷபம் (Rishaba Rasi Palan October 2022 In Tamil)

பொது பலன்: 

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மற்றும் யோக கிரகமான புதன் சேர்க்கை, சனி 9 இல் ஆட்சி கொள்வது உங்களுக்கு சிறப்பான பலன் அளிக்கும்.  செவ்வாய் மிதுனத்தில் இருப்பதால் பொறுமை கடைப்பிடித்தால் நன்மை ஆகும்.  2இல் இருக்கும் செவ்வாய் பேச்சின் மூலம் வீண்வம்பு வழக்கை உருவாக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

மாத தொடக்கத்தில் 5 ஆம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் மகிழ்ச்சியான தருணத்தை அளிக்கும்,  இல்லற வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.  ஆனால் பிற்பகுதியில் 6ம் வீட்டிற்கு வருவது வீட்டில், சுற்றத்தாருடன் மனவருத்தம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது, அமைதியாக இருக்க வேண்டும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் 6 இல் இருப்பதால் நண்பர்களுடன்  கருத்து மோதல் ஏற்படும். 

தொழில்: 

சனியின் வக்கிர நிவர்த்தி தொழிலில் சாதகமாக அமையும், பெரியளவு வேலை அழுத்தம் இருக்காது. புதிய வேலை தேட சரியான தருணமாகும்.  மாதத்தின் முற்பகுதி உங்களுக்கு முக்கிய முடிவு எடுக்க சரியானது ஆகும். கல்வியில் பிரச்சனை இல்லை. வியாபாரத்தில் நலல் நிலை உண்டு. நிலுவையில் இருந்த  அரசு சார்ந்த வேலைகள் சாதகமாகும். வீடு, வண்டி வாகனம் மாற்றலாம்.  நிதி நிலையில் பிரச்சனை இல்லை, வழக்கம்போல் கையில்  திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும்.   

உடல்நலம்: 

மாதத்தின் முற்பகுதியில் இருக்கும் மன அமைதி பிற்பகுதியில் நீடிக்காது.  சூரியன் ஆறாம் வீட்டிற்கு நகர்வதால் சிறிய உடல் உபாதைகள் அளிக்கும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 1, 2, 3, 29, 30

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்