Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் நாளுக்கான [15 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 09.00 - 10.00 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். துணையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பணியிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். அனாவசிய செலவை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாரா பணவரவு உண்டு. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நுட்பமான சிந்தனையின் மூலம் வியாபாரத்தில் லாபத்தை ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. நிதிநிலைமை தாராளமாகவே உள்ளது. இதனால், சேமிப்பு உயரும். கடனாக கொடுத்த பண திடீரென வசூலாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒரு உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன் வழி பந்தங்களால் ஆதாயம் ஏற்படும். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். ஒருசிலருக்கு புது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். மனம் திறந்து பேசுங்கள். வரவு செலவு இரண்டும் இருக்கும். பயணத்தின் போது பணத்தை கவனமாக கையாள வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பணிசுமை அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். சிலருக்கு புதிய மனை, வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் தாமதம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமான தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். சகபணியாளர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அரவணைப்பும் அதிகரிக்கும் நாள். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். காதலர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில முக்கிய பணிகளில் தடை, தாமதம் ஏற்படும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, வாகன பயணத்தில் எச்சரிக்கை வேணும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நண்பர்களுடன் இருந்த பிரச்சனை தீர்ந்து, ஒன்று சேர்வீர்கள். வீம்பாக இருந்த குடும்பத்தினர் தானாகவே வந்து உங்களிடம் பேசுவார்கள். எதிர்பாலினத்தவரால் நன்மை ஏற்படும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நேர்மறையான அணுகுமுறை மூலம் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணவரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரம் சார்ந்த பேச்சு எழும். நீர்நிலைகளுக்கு செலவதை தவிர்க்கவும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பயணத்தின் போது பணம் பத்திரம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடத்து கொள்ளவும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் மனதில் கவலை தோன்றி மறையும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்