Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

சனீஸ்வரரை குளிர்விக்க சனி பகவான் ஸ்லோகம் | sani bhagavan slogan

Priyanka Hochumin Updated:
சனீஸ்வரரை குளிர்விக்க சனி பகவான் ஸ்லோகம் | sani bhagavan sloganRepresentative Image.

மனிதர்களின் வாழ்க்கையில் நவகிரகங்கள் முக்கிய பங்கு விதிக்கின்றனர். காரணம் அவற்றைக் கொண்டு தான் நமக்கான நற்பலன்கள், தீமை பலன்கள் அமைகிறது. நவகிரக கடவுள்களுள் நாம் அனைவரும் பார்த்து பதறும் கடவுள் தான் சனி பகவான். இவரின் பார்வை நம்மீது பட்டாலே தீமை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. கிரக நிலை மாற்றம் ஏற்படும் போது மற்ற கடவுள்களை விட மெதுவாக நகர்வது சனீஸ்வரர் தான். மேலும் இவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதால் நீதிக் கடவும் என்றும் அழைக்கப்படுகிறார்.

சனீஸ்வரரை குளிர்விக்க சனி பகவான் ஸ்லோகம் | sani bhagavan sloganRepresentative Image

சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் வைகாசி மாதம் அம்மாவாசை தினத்தன்று பிறந்தவர் தான் சனி பகவான். இவரின் பிறந்த நாளைத் தான் சனி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். எனவே, இந்நாளில் சனி தோஷம் உள்ளவர்கள் பிரசேதிப்பெற்ற சனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்வது மிகவும் நல்லது. மேலும் ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெறும் ராசிக்காரர்கள் சனி பகவானை சாந்தப்படுத்த சில மந்திரங்கள் சொல்லி வணங்கலாம். இதன் மூலம் நமக்கு நேர இருக்கும் தீமைகள் விலகி, நமக்கு நன்மை நடக்க சனியின் அருள் கிடைக்கும்.

சனீஸ்வரரை குளிர்விக்க சனி பகவான் ஸ்லோகம் | sani bhagavan sloganRepresentative Image

சனி பகவான் ஸ்லோகம்

"நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்"

 

பொருள்

கண் மை போன்று கருமை நிறம் கொண்டவனே. சூரியனின் மைந்தனே, எமதர்மனின் சகோதரனே, சாயாதேவிக்கு மகனாக பிறந்தவனே, மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே உன்னை மனதாரப் போற்றுகிறேன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்