Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in Tamil

Gowthami Subramani Updated:
சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image.

சனியைப் போல் கொடுப்பவரும் எவரும் இல்லை. கெடுப்பவரும் எவரும் இல்லை. சனி பகவான் கொடுக்கும் துன்பங்களிலிருந்து விலகி, நன்மைகளைப் பெற நாம் சனி கவசம் பாட வேண்டும். இதில் சனி கவசம் பாடல்களை இதில் காண்போம்.

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

சனி பகவான் அருள்

நீதி நாயகனாக விளங்கும் சனி பகவான், ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பார். இவ்வாறு ஒருவரின் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ற பலன்களை வழங்குவதால், சனீஸ்வரனுக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்தது. இவர் துன்பத்தை மட்டும் தரக்கூடியவர் அல்ல. தன்னுடைய வேலைகளில் கவனமாகவும், சரியாகவும், நேர்மையாகவும் செய்யும் நபர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத பலன்களை செய்வார். சனீஸ்வரன் துன்பம் தரக்கூடிய காலம் ஏழரை சனிக்காலம். சனி தசை நடப்பது அஷ்டம சனி என்று கூறுவர். அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது, சனீஸ்வர பகவானுக்கு விளக்கு ஏற்றி சனி கவசத்தை மனமுறுகி பாராயணம் செய்யும் போது துன்பங்களில் இருந்து நம்மை விலக்கி வைப்பார்.

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

சனி கவசம் பாடல் வரிகள்

கருநிறக் காகம் ஏறி

காசினி தன்னைக் காக்கும்

ஒரு பெரும் கிரகமான

ஒப்பற்ற சனியே! உந்தன்

அருள் கேட்டு வணங்குகின்றேன்!

ஆதரித் தெம்மை காப்பாய்!

பொருளோடு பொன்னை அள்ளி

பூவுலகில் எமக்குத் தாராய்!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

ஏழரைச் சனியாய் வந்தும்

எட்டினில் இடம் பிடித்தும்

கோளாறு நான்கில் தந்தும்

கொண்டதோர் கண்ட கத்தில்

ஏழினில் நின்ற போதும்

இன்னல்கள் தாரா வண்ணம்

ஞாலத்தில் எம்மைக் காக்க

நம்பியே தொழுகின்றேன் நான்!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

பன்னிரு ராசி கட்கும்

பாரினில் நன்மை கிட்ட

எண்ணிய எண்ணம் எல்லாம்

ஈடேறி வழிகள் காட்ட

எண்ணெய்யில் குளிக்கும் நல்ல

ஈசனே உனைத் துதித்தேன்!

புண்ணியம் எனக்கு தந்தே

புகழ் கூட்ட வேண்டும் நீயே!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

கரும்பினில் ஆடை ஏற்றாய்

காகத்தில் ஏறி நின்றாய்

இரும்பினை உலோகமாக்கி

எள் தனில் பிரியம் வைத்தாய்!

அரும்பினில் நீல வண்ணம்

அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்

பெரும் பொருள் வழங்கும் ஈசா

பேரருள் தருக நீயே!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

சனியெனும் கிழமை கொண்டாய்

சங்கடம் விலக வைப்பாய்

அணிதிகழ் அனுஷம், பூசம்

ஆன்றோர் உத்திரட்டாதி

இனிதே உன் விண்மீனாகும்

எழில் நீலா மனைவியாவாள்!

பணியாக உனக்கு ஆண்டு

பத்தொன்போ தென்று சொல்வாய்!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

குளிகனை மகனாய்ப் பெற்றாய்

குறைகளை அகல வைப்பாய்

எழிலான சூரியன் உன்

இணையற்ற தந்தை யாவார்!

விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்

விநாயகர் அனுமன் தன்னைத்

தொழுதாலோ விலகிச் செல்வாய்

துணையாகி அருளைத் தாராய்!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

அன்ன தானத்தின் மீது

அளவிலா பிரியம் வைத்த

மன்னனே! சனியே! உன்னை

மனதாரப் போற்றுகின்றோம்!

உன்னையே சரணடைந்தோம்!

உயர்வெல்லாம் எமக்குத் தந்தே

மன்னர் போல் வாழ்வதற்கே

மணியான வழி வகுப்பாய்!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

மந்தனாம் காரி நீலா

மணியான மகர வாசா!

தந்ததோர் கவசம் கேட்டே

சனி என்னும் எங்கள் ஈசா!

சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image

வந்திடும் துயரம் நீங்கு

வாழ்வினை வசந்தம் ஆக்கு!

எந்த நாள் வந்த போதும்

இனிய நாள் ஆக மாற்று!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்