Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Kanni Rasi Sani Peyarchi 2020 to 2023: கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சியால் சொத்துகள் குவியுமா! இல்லை நஷ்டமா!

Manoj Krishnamoorthi May 22, 2022 & 09:05 [IST]
Kanni Rasi Sani Peyarchi 2020 to 2023: கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சியால் சொத்துகள் குவியுமா! இல்லை நஷ்டமா!Representative Image.

இந்து சமய ஜோதிடத்தில் மனித வாழ்வைக் கிரக நிலை மாற்றத்துடன் சேர்ந்தது ஆகும், நவகிரகத்தில் சனிபோல் நன்மையை அளிக் கொடுப்பது யாருமில்லை என்பது பொதுவாகக் கூறும் கருத்து ஆகும். அதேநேரத்தில் மனிதனின் கர்ம வினைகளுக்கு தகுந்த பயனை அளிக்கும் சனிபகவான் தன்னுடைய மூல ஸ்தானமான கும்ப ராசிக்கு ஏப்ரல் 29, 2022 அன்று இடம்மாறியதால்  கன்னி ராசிக்கு ஏற்பட்ட பலன்கள் (Kanni Rasi Sani Peyarchi 2020 to 2023) பற்றிக் காண்போம். 

கன்னி ராசியின் சனி பெயர்ச்சி பலன் (Kanni Rasi Sani Peyarchi 2020 to 2023)

பொது பலன்

சாந்தமான சுபாவம் கொண்ட கன்னி ராசிக்காரரே 2022 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தொழில் ஸ்தானத்துக்கு அதீத நன்மையாக உள்ளது. கும்பத்தில் சனி பகவான் இருப்பது நீண்ட நாள் பிரச்சனைகளைப் போக்கும், அத்துடன் 12.07.2022 முதல் சனி பகவான் 5 வது வீடான மகரத்துக்கு இடமாறுவது தற்போது உள்ளதைவிடச் செல்வத்தை மேம்படுத்தும்.  

குடும்ப வாழ்க்கை

2022 சனி பெயர்ச்சியால் உங்கள் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் இரண்டுமே நன்றாக இருக்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும், மேலும் நண்பர்களின் மூலம் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சுமூகமாக நகரும். திருமணமாகாத கன்னி ராசிக்காரருக்கு திருமணத் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

முக்கியமாகக் குழந்தை பாக்கியம் உள்ளது, குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். மொத்தத்தில் 2022 சனி பெயர்ச்சி குடும்ப வாழ்க்கை சிறப்பாக மாற்றியுள்ளது. 

தொழில்

அமோகமான தொழில் வளர்ச்சியை அளிக்கப்போவது இந்த சனி பெயர்ச்சி ஆகும், சுய தொழில் செய்பவருக்கு அவர்களின் பொறுமையின் பலனாக நல்ல லாபம் கிடைக்கும், செல்வாக்கு உயரும். சொத்துகள் சேர்ந்து தங்கள் நிலை உயரும் நிலை ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும், உங்கள் தொழிலில் உங்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அரசாங்க வேலைத் தேடுபவருக்கு அரசாங்க வேலைக் கிடைக்கும் யோகம் உள்ளது. விளையாட்டுத் துறையில் இருப்பவருக்கு தக்க அந்தஸ்து கிடைக்கும். 

கல்வி

கன்னி ராசி மாணவர்களுக்கு கல்வி செல்வம் சிறப்பாக உள்ளது, 2022 சனி பெயர்ச்சி உங்களை உயர் கல்வி கற்க அயல்நாடு அழைத்து செல்லும் வாய்ப்பு உள்ளது, வெளிநாடு சென்று படிக்க எண்ணுவோருக்கு விடாமுயற்சி நிச்சயம் முன்னேற வாய்ப்பளிக்கும். போட்டி தேர்வு அல்லது உயர்கல்வி தேர்வு எழுதும் கன்னி ராசிக்காரருக்கு வெற்றி உறுதியாகும். சனி பகவனின் முழு அருளும் உங்களுக்கு கிடைப்பதால் கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும்.  

உடல்நலம்

ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் எதுவுமின்றி இருந்தாலும் குடும்பத்தினருக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். அவ்வப்போது சிறிய தொல்லைகள் வந்தாலும் அது பெரியதாகப் பாதிக்காது. 2022 சனி பெயர்ச்சி உங்களுக்கு நல்ல உடல்நலத்தை அளித்தாலும் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

பரிகாரம்

  • மிருகங்களுக்கு தினமும் உணவளிப்பது நன்மைத் தரும்.
  • வாரந்தோறும் புதன்கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்தல் வேண்டும்.
  • பிரதோஷ தினத்தில் உங்களால் முடிந்த தானத்தை ஏழை எளியோர்களுக்கு அளித்தல் மேலும் நல்ல பலன் அளிக்கும்.

இதையும் படிக்கலாமே: சனி பெயர்ச்சி பலன் 2022, கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்