Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Simha Rasi Sani Peyarchi 2022: இந்த வருட சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்கு சாதகமா!

Manoj Krishnamoorthi May 16, 2022 & 13:40 [IST]
Simha Rasi Sani Peyarchi 2022: இந்த வருட சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்கு சாதகமா! Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தில் தன்னம்பிக்கை அதிகம் நிறைந்த சிம்ம ராசிக்காரரின் இயல்பு தனித்துவமாக இருக்கும், தான் நிலை கொண்டு இருக்கும் இடத்தில் முதன்மையாகத் திகழ்வதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் சிம்ம ராசிக்காரர், அசாதரமாண செயல்கள் செய்யத் தயங்காத தைரியம் குணம் கொண்ட சிம்ம ராசியினருக்கு சனி பெயர்ச்சியால் ஏற்படும் பலன் பற்றி இவ்வாசகத்தில் காண்போம்.

சிம்ம ராசியின் சனி பெயர்ச்சி பலன் (Simha Rasi Sani Peyarchi 2022)

பொது பலன்

வாழ்வில் எந்த நிலையிலும் தளர்வடையாமல்  மன உறுதியுடன் போராடும் சிம்ம ராசிக்காரரே உங்கள் ராசியில் சனி பகவான் 29.04.22 முதல் 12.07.22 வரை 7ம் வீட்டில், குடியிருப்பது முன்னேற்றம் அளிக்கும். தொழில் ஸ்தானம் நன்றாக முன்னேற்றம் கொள்ளும், முக்கியமாக சுயதொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். குறுகிய காலத்தில் செல்வ நிலை நன்றாக உயரும். 

குடும்ப வாழ்க்கை

குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்ட உங்கள் இந்த சனி பெயர்ச்சியில் சில மோதல் உருவாகும், உங்கள் பிடிவாத குணத்தால் குடும்பத்தில் உள்ளவருடன் அதிகமாக வாக்குவாதம் செய்வீர்கள். திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது. காதல் விவகாரம் இந்த காலகட்டத்தில் சில சங்கடங்களைத் தரும். அதனால் பொறுமை காப்பது வீட்டின் நிம்மதியைக் கெடுக்காது.  

தொழில்

அயராது உழைக்கும் எண்ணம் கொண்ட சிம்ம ராசிக்காரரே இந்த 2022 சனி பெயர்ச்சி உங்களுக்கு தொழிலில் சில ஏற்ற தாழ்வு தந்தாலும், லாபம் அளிக்கும். தொழிலில் இருக்கும் வேலைச் சுமை அதிகமாக உழைக்க வைக்கும், அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். 

பொழுதுபோக்கு மற்றும் கலைத்துறையில் இருப்பவருக்கு மந்தமான நிலையாக இருக்கும், வருமானம் வளர்ச்சி கொள்ளாது. அரசு வேலைக் கிடைக்கும் யோகம் உள்ளது. தொழிலில் காட்டும் கடினமான நல்ல வெகுமதியை அளிக்கும். நிதி நிலை பொருத்தவரை வரவு இருக்கும்.  

கல்வி

2022 சனி பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரருக்கு வெற்றி அளிக்கும், ஆனால் வெற்றியைக் கைப்பற்றக் கடினமான உழைப்பு தேவைப்படும். போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் சிம்ம ராசிக்காரருக்கு எதிர்பார்த்த ரிசலட் அளிக்கும். உயர்கல்வி படிக்க விரும்பு சிம்ம ராசிக்காரருக்கு ஊக்கத் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பொறியியல் பாடம் பயிலும் மாணவர்களின் கல்வியில் புதிய சாதனைகள் படைப்பர்.

உடல்நலம்

சனி பகவான் 7ஆம் வீட்டில் இருப்பது இதுவரை இருந்த உடல் குறைகளைத் தீர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மருத்துவ செலவு குறையும். அவ்வப்போது உருவாகும் சிறிய உடல் கோளாறுகள் பெரியதாகப் பாதிக்காது. உணவு பழக்கத்தில் இருக்கும் கவனம் உங்கள் உடல்நலத்தைப் பேணிக் காக்கும்.

பரிகாரம்

  • சூரிய பகவான் வழிபாடு தினமும் செய்ய வேண்டும்.
  • பசுக்களுக்கு உணவு அளிப்பது நன்மை தரும்.
  • வாரம் ஒருமுறை  சிவ ஆலயம் சென்று சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்