Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

sani peyarchi 2022 thulam rasi: நீதி நிலை மாறாத துலாம் ராசிக்காரருக்கு..... 2022 சனி பெயர்ச்சி உருவாக்கும் குழப்பம் இவ்வளவா?

Manoj Krishnamoorthi May 23, 2022 & 12:25 [IST]
sani peyarchi 2022 thulam rasi: நீதி நிலை மாறாத துலாம் ராசிக்காரருக்கு..... 2022 சனி பெயர்ச்சி உருவாக்கும் குழப்பம் இவ்வளவா?Representative Image.

சூரிய தேவரின் புதல்வரான சனி பகவன் ஒருவன் செயலின் கர்ம வினைப் பலனைச் சரிவரத் தரும் இறைவன் ஆவார். ஒருவன் வாழ்வில் அவன் செய்த செயலின் பலனை அளித்து வாழ்வில் மேம்படுத்தும் கிரகமான சனி பகவான் 29.04.2022 அன்று கும்பத்தில் இடம் பெயர்ந்த சனி பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு (sani peyarchi 2022 thulam rasi) கிடைத்த பலன் பற்றி அறிய ஆவலாக உள்ளதா! நீங்கள் சரியான பக்கத்தில் தான் உள்ளீர்க்ள். முழுமையாக 2022 துலாம் ராசியின் சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி அறிய தொடர்ந்து வாசியுங்கள்.   

துலாம் ராசி 2022 சனி பெயர்ச்சி பலன்  (sani peyarchi 2022 thulam rasi)

 

பொது பலன்

நீதி தவறாத வாழ்க்கை வாழ நினைக்கும் துலாம் ராசிக்காரரே ஏப்ரல் 29, 2022 முதல் உங்கள் ராசியில் சனி பகவான் 5ம் வீட்டில் இருப்பது  எதிர்பாராத திடீர் உதவிகளைத் தரும். வாழ்வில் ஒட்டு மொத்த அதிர்ஷ்டமும் இந்த 2022 சனி பெயர்ச்சி காலத்தில் உங்கள் அருகில் இருப்பதாக உணர்வீர்கள். தொழில் விசயத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் வாழ்க்கையைப் பாதிக்காது, மேலும் 12.07.2022 முதல் 4வது வீடான மகரத்தில் சனி பகவான் இடம் பெயர்வது ஒருசில மன சங்கடத்தை அளிக்கும். முக்கியமாக குடும்ப ஸ்தானத்தில் பிரச்சனைகள் உதிக்கும். உங்களுக்கு சனி பகவான் அதிர்ஷ்டத்தை முன் பாதியிலும் பிரச்சனைகளைப் பின்பாதியில் தந்தாலும் 2022 சனி பெயர்ச்சி சற்று  சாதகமாகும்.

குடும்ப வாழ்க்கை

இன்பமான உறவைக் கொண்ட உங்களுக்கு இந்த வருட 2022 சனி பெயர்ச்சி சிறிய ஊடல்களை உருவாக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த நல்லுறவுக்குள் விரிசல் உருவாகும், மன வருத்தம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் சிறிய சலிப்பு இருக்கும், சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருப்பது உங்கள் குடும்ப ஸ்தானத்தில் கவலையை உருவாக்கும்.

வாழ்க்கை துணையுடன் சண்டைகள் வராமல் இருக்க வெளிப்படையான பேச்சு உதவும்,  இந்த சனி பெயர்ச்சி காலம் வீட்டில்  மகிழ்ச்சியைக் குரைத்தாலும் புரிதலை ஏற்படுத்தும்.        

தொழில்

செய்யும் வேலையை முதன்மை கடமையாகக் கொண்ட உங்களுக்கு 29.04.2022 ஏற்பட்ட சனி பெயர்ச்சி உத்தியோகத்தில் சில ஏற்ற இறக்கத்தை அளிக்கும், இருக்கும் சுமாரான நிலை நீங்கி  2022 வருட இறுதியில் நல்ல பலன் அளிக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சுய தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அரசாங்க சம்பந்த வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். வேலைத் தேடுபவருக்கு புதிய வேலைக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொது சேவை துறையில் இருப்பவருக்கு பணி மாற்றம் இருக்கும். இந்த சனி பெயர்ச்சி செல்வ நிலையை மேம்படுத்தும்.    

கல்வி

மாணவர்களின் கல்வி நிலையில் சில தடைகள் இருக்கும், எனவே கவனம் சிதறாமல் படிப்பது எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நினைப்போருக்கு உதவித் தொகைக் கிடைக்கும். 2022 சனி பெயர்ச்சி கல்வியில் சற்று சுமாரான பலனே அளிக்கும்,  

உடல்நலம்

துலாம் ராசிக்காரர் முக்கியமாக இந்த சனி பெயர்ச்சி காலக் கட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சிறுசிறு உடல் உபாயங்கள் அவ்வப்போது உருவானாலும் பெரியதாகப் பாதிக்காது. அவ்வப்போது உருவாகும் ஆரோக்கியக் குறை 2022 இறுதி பகுதியில் படிப்படியாகச் சரியாகி உடலைப் புத்துணர்ச்சி ஆக்கும். 

பரிகாரம்

  • ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
  • உங்கள் ராசிக்கு தகுந்த ராசி கற்களை அணிய வேண்டும். 
  • சனிக்கிழமை தினங்களில் காலை காகத்துக்கு உணவளித்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: Meenam Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் ராஜ யோகம் அடைந்த மீன ராசி! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்