Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Viruchigam Rasi Sani Peyarchi 2022: விருச்சிக ராசிக்காரரே மன வலிமையைக் கூட்டும் சனி பெயர்ச்சி பலன்கள்...! விடாமுயற்சியால் உயரும் தருணமா இது?    

Manoj Krishnamoorthi May 24, 2022 & 11:15 [IST]
Viruchigam Rasi Sani Peyarchi 2022: விருச்சிக ராசிக்காரரே மன வலிமையைக் கூட்டும் சனி பெயர்ச்சி பலன்கள்...! விடாமுயற்சியால் உயரும் தருணமா இது?    Representative Image.

சனியின் பார்வை பட்டால் நிச்சியம் மனிதனின் வாழ்வு அடுத்த கட்டம் நகரும் என்பது மறுக்கப்படாத உண்மை ஆகும், நாம் செயலின் சரியான வினைப் பயனை சனி பகவான் தருவதோடு வாழ்வின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார். உங்கள் ராசிக்கு 29.04.2022 அன்று நடந்த சனி பெயர்ச்சியால் (viruchigam rasi sani peyarchi 2022) ஏற்படும் பலன் பற்றி அறிய பின்தொடர்ந்து வாருங்கள். 

விருச்சிக ராசி 2022 சனி பெயர்ச்சி பலன் (viruchigam rasi sani peyarchi 2022)

பொது பலன்

தன்னலமற்ற குணமும் பாராட்டு எதிர்பார்ப்பும் கொண்ட உங்களுக்கு ஏப்ரல் 29, 2022 முதல் ஜூலை 12, 2022 வரை சனி பகவான நான்காம் வீட்டில் இருப்பது சில கடினமான சூழ்நிலையை அளித்தாலும் உங்களின் தனித்துவமான  ஆளுமைத் திறன் ஓங்கி நிற்கும். தொழிலில் ஸ்தானத்தில் சில கஷ்டங்கள் தரும் ஆனால் பணியிடத்தில் மதிப்பு நிலைத்திருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஓற்றுமை அதிகரிக்கும். இந்த 2022 நிகழ்ந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலனைத் தந்தாலும் பிற்பகுதியில் நல்ல பலன் அளிக்கும்.

குடும்ப வாழ்க்கை

நீதி நெறி மங்காது வாழும் உங்களுக்கு குடும்பத்தை விட கடமையே முக்கியமாக இருக்கும், இந்த 2022 சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான குடும்ப வாழ்வை அளிக்கும். திருமண பந்தம் இன்பமாக இருக்கும்,  கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். இந்த சனி பெயர்ச்சி காலம் குடும்பத்துடன் அதிக நேரத்தை ஒதுக்க உதவும். சனி பகவானின் அருளால் இனிமையான இல்லறம் அமையும்.

நண்பர்கள் மற்றும் உறவினரின் மூலம் ஆனந்தம் அதிகமாகும், திருமணமாகாத விருச்சிக ராசிக்காரருக்கு திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும், குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் அதிகமாக இருக்கும்.  

தொழில்

சனி பகவான்  4 ஆம் வீட்டில் இருப்பது தொழிலில் சில தடைகளைத் தந்தாலும், வளர்ச்சி என்பது சீராக இருக்கும். சுய தொழிலில் இருப்பவருக்கு விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உதவும். வேலையில்லாத விருச்சிக ராசிக்காரருக்கு சனி பெயர்ச்சி நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும். ஜூலை 12, 2022 பிறகு தொழில் சகஜமான நிலைக்கு மாறி லாபம் அளிக்கத் தொடங்கும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு பெறுவது உறுதியாகும். நிலம் மற்றும் விவசாயத் தொழில் செய்பவருக்கு சனி பெயர்ச்சி செல்வ நிலையை உயர்த்தும். முக்கியமாக இந்த சனி பெயர்ச்சி காலத்தில் திடமான மன வலிமை தான் உங்களை சோர்வடைய விடாமல் ஊக்க வைக்கும். 

கல்வி

போட்டி தேர்வு அல்லது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும், எதிர்பார்த்தையை விட அதிகமான பயன் கிடைக்கும். உயர்கல்வி படிக்க நினைப்போருக்கு ஊக்கத் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு வரும். மருத்துவத் துறை மானவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. 

உடல்நலம்

விருச்சிக ராசிக்காரருக்கு 2022 சனி பெயர்ச்சி சில உடல் உபாயங்களைத் தரும் அதனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவையாகும்.  மருத்துவ சிகிச்சை நிகழ நேரிடும். வழக்கமான உடற்பயிற்சியும் சத்தான உணவு பழக்கமும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சனி பெயர்ச்சியின் முடிவில் உடல்நலக் குறைப் படிப்படியாகக் குறைந்து உடல் புத்துணர்ச்சி அடையும்.

பரிகாரம்

  • அனுமன் வழிபாடு செய்வது எதிர்மறை வினையில் இருந்து மீளும் மன வலிமை அளிக்கும். 
  • கால பைரவர் வணங்கி நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
  • சனிக்கிழமை தினத்தில் கருப்பு அல்லது கருநீல நிற ஆடைகளைத் தானமாக அளித்தல் வேண்டும்.  

அதிகம் படிப்பவை: Sani Peyarchi Kataka Rasi: கடகத்தின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள்! பற்றி அறிய இங்குன் க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்