Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Saturn Transit Retrograde 2022: சனி பகவான் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சிகிட்டு கொட்ட போகுது!

Priyanka Hochumin June 07, 2022 & 20:15 [IST]
Saturn Transit Retrograde 2022: சனி பகவான் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சிகிட்டு கொட்ட போகுது!Representative Image.

Saturn Transit Retrograde 2022: தற்போது ஏற்பட்டுள்ள சனி வக்ர பெயர்ச்சியினால் கிரக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சில ராசி காரர்களுக்கு நற்பலனையும் ஒரு சில ராசி காரர்களுக்கு துன்பங்களையும் தர உள்ளது. அது யார் யாருக்கு என்று பார்ப்போம்!

இந்த மாதம் ஜூன் 5, 2022 அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலைக்கு மாறி பின்னோக்கி செல்ல உள்ளார் என்று ஜோதிட சாஸ்திரத்தம் கூறுகிறது. இது எப்பொழுது வரை நீடிக்க உள்ளது என்றால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி பயணிக்க உள்ளார். பொதுவாகவே ஒரு கிரகம் மாறும்போது அல்லது பின்போக்குத்தனமாக பயணிக்கும் பொழுது 12 ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கும். இந்த மாற்றங்கள் சில ராசிக்கு சுப பலனையும் ஒரு சில ராசிக்கு அசுப பலனையும் தரவுள்ளது.

மக்கள் மத்தியில் பொதுவாகவே சனி பகவான் கஷ்டங்களை மட்டும் தான் தருவார் என்ற எண்ணம் இருக்கிறது. இதனைத் தெரிந்தவுடன் இவர் நன்மையையும் அளிப்பார் என்று தெரிந்துகொள்வீர்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு மாறினார். இது ஒரு சில பேருக்கு எதிர்பார்க்காத மாற்றங்களை அளித்திருக்க வாய்ப்புகள் உள்ளது. அது யாருக்கு என்றால்? ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை நாடாகும் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் கொடுமையான பார்வையை சந்தித்திருப்பார்கள். மேலும் ஜாதகத்தில் சனியின் சக்தி பலவீனமாக இருக்கும் ராசிக்காரர்களுக்கு உடல் நலம், தொழில் போன்றவற்றில் இன்னல்கள் ஏற்பட்டிருக்கும்.

இப்படி கிரக நிலை இருக்க, ஜூன் 5 ஆம் தேதி நவக்கிரகத்தில் சனி கிரகம் கும்ப ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இது மேஷம், கன்னி, தனுஷ் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது. அது என்னென்ன நன்மைகள் என்று விலாவரியாக பார்க்கலாம்!

தனுஷ் - சனி பகவானின் இந்த வக்ர பயிற்சி தனுஷ் ராசிக்கு அதிக சிறப்பு அளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களை இதுவரை கண்டுக்காமல் இருந்தவர்களிடம் இருந்து புகழ், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் பண வரவு கூடும். ஷேர் மார்க்கெட் போன்ற சந்தைக்கு நெருக்கிய இடங்களில் அல்லது ஏதேனும் தொழில்களில் முதலீடு செய்ய நினைத்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலுக்காக பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரமாகும்.

கன்னி - ஒருவருக்கு உலகத்தில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களும் ஒண்ணா கெடச்சா எப்படி இருக்கும். அப்படி தான் இந்த ராசிக்காரர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும், குடும்ப உறவில் நிம்மதி ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தம்பதியர்களுக்கு இடையில் அன்பு மேம்படும், பண வரவு அதிகரிக்கும் என்று சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

மேஷம் - உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், பணியில் வேலை செய்பவர்களுக்கு மரியாதையை அதிகரிக்கும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பண வரவு மேம்படுத்தும். இது மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையை வலுவானதாக மாற்றும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்