Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vaikasi Matha Rasi Palan in tamil: வைகாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா! PART 1

Manoj Krishnamoorthi May 14, 2022 & 16:00 [IST]
Vaikasi Matha Rasi Palan in tamil: வைகாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா! PART 1Representative Image.

மேஷம்

உங்கள் ராசியில் இராகு சஞ்சாரமிட்டு இருப்பது இந்த மாதம் உங்களுக்கு சுமூகமாக இருக்கும், சுப விரையங்கள் இருந்தாலும் பண வரவு உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உத்தியோகத்தில் மாற்றம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மேஷ  ராசியினருக்கு வெளியூர் அல்ல தொலைதூர பயணம் செல்லும் வாய்ப்பு அதிகம் ஆகும். மேஷ ராசி பெண்கள் விலை உயர்ந்த தங்கம் அல்லது ஆடைகள் வாங்குவீர்கள். பேச்சு திறமையால் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். போட்டி தேர்வு எழுவோர் கடுமையாக  உழைத்தால் வெற்றி நிச்சயமாகும்.  

அஸ்வினி: பண வரவு உண்டு

பரணி: தொழில் முன்னேற்றம்

கிருத்திகை: விரைய செலவு

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

ரிஷப ம்

தெளிவான சிந்தனைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இந்த மாதத்தில் சூரியன் மற்றும் புதன் ஆடிய இரண்டு கிரகமும் இருப்பது, புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு பணியில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரத்தில் இருக்கும் முன்னேற்றம் செல்வ நிலையை உயர்த்தும், எடுக்கும் முயற்சி எதிர்பாராத நன்மையைத் தரும். இந்த மாதம் உங்கள் பேச்சுக்கு அதிகமான மதிப்பு இருக்கும். ஆரோக்கிய குறை உருவாகும். மனம் நிம்மதியாக இருக்கும்.

கிருத்திகை: உயர்வு

ரோகிணி: ஆரோக்கியத்தில் கவனம் தேவை 

மிரிகசீரிஷம்: ஆதாயம்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி

மிதுனம்

நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்க்கும் மிதுன ராசிக்காரரே இந்த வைகாசி மாதம் உங்களுக்கு சில தொழில் கஷ்டங்கள் தீரும். குடும்பத் தேவைக்காக எதிர்பாராத செலவுகள் இருக்கும். சொத்து விவகாரத்தில் கவனம் வேண்டும், முடிக்க வேண்டிய காரியங்களைத் தள்ளிப் போட வேண்டாம். திருமணமாகாத மிதுன ராசிக்காரருக்கு இந்த மாத திருமண யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள்.  கல்வி நிலை நன்றாக உள்ளது.

மிருகசீரஷம்: உதவி

திருவாதிரை:  மாற்றம்

புனர்பூசம்: உறுதி

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

கடகம்

உங்கள் பணிவான குணத்தால் பிறரின் அன்பைக் கவரும் கடக ராசிக்காரரே இந்த வைகாசி உங்கள் உடல்நலத்தில் குறை ஏற்படும், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை ஆலோசிப்பது மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்தும். தொழில் ஸ்தானத்தில் இயல்பான நிலை இருக்கும். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது. உறவினர் மத்தியில் வாக்குவாதம் வரும் வாய்ப்புள்ளது, நண்பர்களின் தொடர்பு குறையும். செல்வ நிலை நன்றாக உள்ளது.  உடன்பிறப்பின் மூலம் தொல்லைகள் உருவாகும்.  

புனர்பூசம்: வரவு

பூசம்: தொல்லை

ஆயில்யம்: கவனம்

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் 

 

இதையும் படிக்க: கடக ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

சிம்மம்

தன்னம்பிக்கை அதிக கொண்ட சிம்ம ராசிக்காரரே உங்கள் ராசிக்கு இந்த வைகாசி மாதம் அமோகமான நன்மைகள் அளிக்கும். கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும். தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது, புதிய தொழில் செய்ய விரும்பும் சிம்ம ராசிக்காரருக்கு வைகாசி மாதம் சிறந்தாகும். நண்பர்களின் மூலம் சந்தோஷம் அதிகமாகும். கவனகுறையால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்துபோவது நன்மையாகும். சுப நிகழ்ச்சி நிகழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தொழிலில் கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.  கல்வியில் கவனக் குறையால் மதிப்பெண் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  செல்வ நிலை மிகவும் நன்றாக உள்ளது.

மகம்: பண வரவு

பூரம்: நலம்

உத்திரம்: சுப செலவு

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

கன்னி

உங்கள் அமைதியான குணத்தால் பிறரின் அன்பைப் பெறும் கன்னி ராசிக்காரரே இந்த மாதம் உங்களுக்கு நண்பர்கள் மூலம் புதிய மனிதர்கள் அறிமுகம் கிடைக்கும், அவர்களால் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைக் கிடைக்கும். புதியதாக வேலைத் தேடுவோருக்கு தற்காலிக வேலை கிடைக்கும் யோகம் யோகம் உள்ளது. வியாபாரம் மிகவும் நன்றாக இருக்கும். செல்வ வரவு இருக்கும்.  குடும்ப வாழ்விலிருந்த பிரச்சனை குறையும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கல்வி நிலை அமோகமாக இருக்கும், கல்வியிலொ நல்ல ரிசல்ட் இருக்கும்.  

உத்திரம்: அறிமுகம்

அஸ்தம்: கடமை

சித்திரை: தன லாபம்

வழிபட வேண்டிய தெய்வம்: ஐயப்பன்

மேலும் படிக்க: PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் வைகாசி ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்