Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்டக சனியே ஆபத்து.. இப்ப வக்ர சனியும் கூட.. சிம்ம ராசியினர் நிலைமை? | Simmam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கண்டக சனியே ஆபத்து.. இப்ப வக்ர சனியும் கூட.. சிம்ம ராசியினர் நிலைமை? | Simmam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார். 

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் சிம்ம ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கண்டக சனியே ஆபத்து.. இப்ப வக்ர சனியும் கூட.. சிம்ம ராசியினர் நிலைமை? | Simmam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 சிம்மம்: 

சனி பகவான் உங்க ராசிக்கு 7 இடத்தில் இருப்பது கண்டக சனி என்று சொல்லப்படும். பொதுவாக, கண்டக சனி காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவது என்பது சாதகமான பலன்களையே கொடுக்கும். கண்டக சனி ஆரம்பமானதில் இருந்து தொட்டதுக்கெல்லாம் பிரச்சனை, சண்டை, சச்சரவு என்று வந்திருக்கும். ஆனால், வக்ரம் அடையும் போது மலையளவு இருந்த பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்ப நிலை அகன்று தெளிவாக சிந்தித்து நீங்களே முடிவெடுப்பீர்கள். 

இழந்த மதிப்பு, மரியாதை திரும்ப கிடைக்கும். உங்களுடைய மதிப்பை மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள். பணியிடத்தில் இருந்த பணிச்சுமை, அலைச்சல் குறைந்து நிம்மதி கிடைக்கும். தாயுடன் இருந்த கருத்துவேறுபாடு குறையும். கல்வி ரீதியாக இருந்த மந்தன்மை நீங்கி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. இருந்த இடத்தில் புதிய இடத்திற்கு வீடு இடமாற்றம் ஏற்படும். 

நண்பர்களுடன் இருந்த வந்த விரிசல், பிடிப்பற்ற நிலை குறைந்து மீண்டும் ஒன்றிணைவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வாழ்க்கை துணையால் இருந்துவந்த கவலைகள், ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். பொருளாதார நெருக்கடிகள், மருத்துவ செலவுகள், தந்தையாருடன் இருந்த கருத்து போராட்டங்கள் நீங்கும். தந்தை உங்களிடம் அனுசரித்து செல்வார். எனவே, இந்த 141 நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் கண்டக சனியால் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்