Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

 Inraiya Raasi Palan:  இன்று ரொம்ப  உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் இவரா! முக்கியமாக கும்ப ராசிக்காரரின் நிலை இன்று இப்படி உள்ளதே! மே 30, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi May 29, 2022 & 15:00 [IST]
 Inraiya Raasi Palan:  இன்று ரொம்ப  உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் இவரா! முக்கியமாக கும்ப ராசிக்காரரின் நிலை இன்று இப்படி உள்ளதே! மே 30, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                              Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை


மேஷம் - கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

நன்மையும் தீமையும் நம் செயலின் விளைவு தான் என்பதை நன்கு உணர்ந்த  உங்களுக்கு இன்று செல்வ நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று உடல்நலத்தில் சிறிய பதட்டம் இருக்கும். பேச்சால் சிக்கல் தோன்றும். கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டும்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

சாமத்தியமாகக் காரியங்களைச் சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் இன்று வழக்கத்தை விட  வேகமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். இன்று எதிர்பாராத செல்வ வரவு இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும், செலவு செய்வது மனதுக்கு கொஞ்சம் கசக்கத் தான் செய்யும். உங்கள் பேச்சால் சிக்கல் குடும்பத்தில் சண்டைகள் உருவாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் தேவை. விரைய செலவு!       

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

கண்ணில் காதலை வெளிப்படுத்தும் தனுசு ராசிக்காரரே இன்று உங்களுக்கு ஒரு சுமுகமான நாளாகும், செய்யும் வேலையில் வெற்றி காண முடியும். அலுவலகத்தில் உங்களுக்கு வகுத்த இலக்கை எளிதில் முடிப்பீர்கள், மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சுழலும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். பண வரவு இருக்கும். உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. ஆரோக்கியம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

அன்பான குணத்தைக் கொண்ட மகர ராசிக்காரரே இன்று  மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அறிவீர்கள், இன்று நேரத்தைத் திட்டமிடுதல் நல்லதாகும்  இல்லையென்றால் நேரம் சிக்கல்களைத் தரும், தற்போது இருக்கும் தடுமாற்ற நிலையை சரி செய்ய எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் கொண்டாட்டம் அதிகமாகும். செலவு பெரியதாக இருக்காது. மனம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக நிறைவு பெறும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் நிதி நிலைமையில் லாப ஸ்தானமாக இருக்கிறது. இன்று உங்களுக்கு ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதாலும், முடிக்காத வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை உருவாகும், மனம் தைரியமான முடிவெடுக்கும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் இன்பமான மன நிலை இருக்கும், வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். சக பணியாளரின் நட்பான அணுகுமுறை பணியில் பல புதிய முயற்சிகள் எடுக்க உதவும். வீட்டில் உங்கள் வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும். கையில் பணம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியமான மனநிலை இன்று உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். சிறப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்