Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 16, 2022 & 13:01 [IST]
Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் நாள் திங்கள்கிழமை (17.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 1:45- 2:45 வரை

ராசிபலன் 

துலாம்- அன்பு

விருச்சிகம்- செலவு

தனுசு- நிதானம்

மகரம்- வரவு

கும்பம்- புகழ்

மீனம்- சுகம்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (17.10.2022, திங்கள்)

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழிலில் ஏற்படும் முன்னேற்றம், மனதில் திருப்தி அளிக்கும். சுற்றத்தாருடன் சந்தோஷமாக இருப்பீர். அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவாகும்.  செல்வ நிலையில் வளர்ச்சி ஏற்படும்.      

குடும்ப வாழ்வில் அன்பு அதிகரிக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இதுவரை மனதில் இருந்த சங்கடம் இன்று சரியாகும். தொழிலில் கவனம் செலுத்த முடியும். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். நிதி நிலை நன்றாக இருக்கும், ஆனால் சேமிக்க முடியாது. 

குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். இல்லற வாழ்வில் சந்தோஷம் கூடும். குடும்ப உறுப்பினரின் மூலம் செலவு ஏற்படலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று புதிய முயற்சி செய்வதில் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தில் முக்கிய முடிவெடுப்பதில் ஆலோசனை வேண்டும். வழக்கமான வேலையில் தாமதம் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் கவனம் வேண்டும். 

வீட்டில் அமைதி காக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதம் சண்டையாக மாறும், பொறுமை தேவை. உடல் ஒருவித சோர்வு இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாகும், வியாபாரிகளுக்கு எதிர்பார்க்காத பண வரவு உண்டு. தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டு. பலரின் சந்திப்பு கிடைக்கும். செல்வ நிலை உயரும், புதிய சொத்து அமையும்.

திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், பெரியவர்களின் ஆலோசனை நற்பலன் அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், உற்சாகமாக செயல்படுவீர். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் புத்திக் கூர்மையால் இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். சுற்றத்தாரின்  மதிப்பு கிடைக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவி உறவில் முக்கியமான உரையாடல் இருக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : தெளிவான மனநிலையால் நிம்மதியான வாழ்க்கை தான்.. 17.10.22 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நிம்மதியான நாள், அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். புதிய முயற்சிகள் சாதகமாகும். கல்வியில் வளர்ச்சி ஏற்படும். செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் வாழ்வில் புரிதல் அதிகமாகும். வீட்டில் அனுசரித்து செல்லுவீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்:2


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்