Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - வெள்ளி | Tomorrow Rasi Palan in Tamil | 30.06.2023

Priyanka Hochumin Updated:
நாளைய ராசிபலன் - வெள்ளி | Tomorrow Rasi Palan in Tamil | 30.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாளுக்கான [30 ஜூன் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 04.30 – 05.00 மணி வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சிலருக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சனைகளில் தெளிவு பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் மேம்படும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் வாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தீரம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். குழைந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மனை நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் இருந்து வந்த குழப்பம் விலகும். உத்தயோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சகோதரர் வகையில் நன்மை ஏற்படும். சிரமம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன் - மனைவி இடையே புரிதல் உண்டாகும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பெற்றோர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பேர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். கொடுத்து வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு!

 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்