Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: MAY 19, 2022 இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் ராசிக்காரர்கள் நீங்களா..?

Gowthami Subramani May 18, 2022 & 16:05 [IST]
Tomorrow Horoscope Tamil: MAY 19, 2022 இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் ராசிக்காரர்கள் நீங்களா..?Representative Image.

Tamil Horoscope Full Predictions                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: -

மேஷம் (Aries 2022 Horoscope)

ஆன்மீக ஈடுபாடுகள் மனநிம்மதி மற்றும் ஆறுதலை அளிக்க வல்லது. இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாகக் காணப்படும். வேலை தொடர்பான பணிகள் காணப்படுகிறது. அதன் மூலம் சுமாரான பயன்கள்மட்டுமே கிட்டும். கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும். அகந்தை உணர்வுகளைத் தவிர்க்கவும். செலவுகள் அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், கவலைகள் உண்டாகும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இருந்த போதிலும், மன உறுதியுடன் இருப்பீர்கள். விநாயகப் பெருமான் வழிபாட்டினால், நன்மைகள் உண்டாகும். மனஉறுதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

ரிஷப ராசி நண்பர்களுக்கு, சுக்ரபகவான் அம்சமான வழியைத் தரப் போகிறார். எனினும், ஆரோக்கியம் சற்று குறைவாக உள்ளது. ஆவணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. விஷ்ணு பகவானின் மந்திரங்களை அருளி, அதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மன உறுதியோடு செயல்பட்டு, எல்லா விஷயத்திலும் வெற்றி ஈட்டுவீர்கள். சிந்தித்தல்

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்று உங்களுக்குச் சிறப்பான நாள். எதிலும் வெற்றி பெறக்கூடிய நாளாக உள்ளது. கணவன், மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். ஐடி துறைகள், மீடியா துறைகள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகச் சிறந்து விளங்குவர். இதற்கு மேல், எந்தக் கவலைகளும் இருக்காது. மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இருந்த போதிலும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். உதவி

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Cancer 2022 Horoscope)

கடக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அற்புதமான நாள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் இன்றைய நாளில் தேர்வு மேற்கொண்டால் அமோக வெற்றி கிடைக்கும். எல்லாவற்றிலும் வெற்றி பெறக் கூடிய நாளாக இந்த நாள் அமைகிறது. பல விதமான ஏற்றங்கள் உண்டாகும். ஒன்று அல்ல, இரண்டு அல்ல, ஏராளக்கணக்கான முன்னேற்றங்கள். நல்ல விஷயங்கள் நடக்கும். எனினும் உறவினர்களுக்கிடையே சிறிது சண்டை ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே சிறிது கவனமாக இருப்பது நல்லது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று சிறப்பான நாள். கணிதம், பாட்டு பாடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். எல்லாவற்றிலும் மேன்மை தான். பூரிப்பு அடையும் நாளாக இந்த நாள் அமையும். எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவீர்கள். எல்லாவற்றிலும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மென்மேலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

உறவினர்களுடன் இருக்கும் வாக்குவாதங்கள் முடிந்து சந்தோஷமாக இருப்பிர்கள். பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான நாளாக இந்த நாள் இருக்கப் போகிறது. வீட்டிற்குத் தேவையான முக்கியமான சாதனங்களை வாங்குவீர்கள். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வகையில் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். சந்தோஷமாக இருக்கும் நாளாக அமையும். வெற்றி மேல் வெற்றி ஈட்டுவீர்கள். எனினும், பணப்புழக்கம் குறைந்து காணப்படும். மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் (Libra 2022 Horoscope)

 சிறு தொழில்கள் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. உறவினர்கள் மூலம் நல்லது நடக்கும். ஒரு அருமையான நாளாக அமைகிறது. இழுபறியான பணிகளைச் செய்து முடிக்கும் நிலை உண்டாகும். உறவினர்களிடம் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத உதவிகள் மூலம் தூர பயணங்களை மேற்கொள்வதாக இருக்கக் கூடும். இதன் மூலம், சிறந்தப் பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வளம் காண்பீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

எதிலும், உடனடியாக பதி செல்வீர்கள். கேட்ட உடனே சமயோஜித புத்தி கொண்டு அதிவிரைவாகச் செயல்படுவீர்கள். யாராலும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வெற்றியை காண்பீர்கள். அபாரமான நல்ல விஷயங்கள் நடக்கக் கூடிய ஒரு நல்ல நாளாக அமையும். கற்பனைத் திறம் அதிகமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

நடிகர் தனுசைப் போலவே, தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் இளமையுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவியிடையே ஒரு நல்ல விதமான புரிதல் உண்டாகும். வீட்டில் நல்லது நடக்கும். திருமணம் முடிந்த பெண்களுக்குக் குழந்தை உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. எதிலும் மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாழ்வில் வெற்றியை ஈட்டுவீர்கள். மிகுந்த மகிழ்ச்சியுடைய நாளாக அமைகிறது. சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று கவனிப்பாக இருக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அதிக அளவிலான கவனம் தேவை. நரம்பு தளர்ச்சிகள் உண்டாகக் கூடிய நாளாக அமைகிறது. ஆவணங்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பது நல்லது. செலவு அதிகமாக செய்வீர்கள். நல்ல விஷயத்துக்கு செலவு செய்வது தவறு அல்ல. தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவு செய்து வீணடிக்காதீர்கள். இருந்த போதிலும் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடிய நாளாக அமைகிறது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று சிறப்பான நாளாக உள்ளது. இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். உறவினர்களுடன் மற்றும் நண்பர்களுடன் மிகுந்த நன்மைகள் உண்டாகும். மகா விஷ்ணுவின் அனுகிரகத்தினால், நல்லது நடக்கும். முன்னோர்கள் சொத்துக்கள் உங்கள் பெயரில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிலும் பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக வைத்துச் செயல்படுவீர்கள். இதனால், நிம்மதி ஏற்படும். வர்த்தகம் போன்ற முதலீடுகளில் உள்ள சூட்சுமங்களை அறிவதற்கான நாளான இந்த நாள் உள்ளது. நேர்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Pisces 2022 Horoscope)

என்றைக்கும் இல்லாத அளவு சிறப்பான வெற்றியாக இந்த நாள் உள்ளது. எல்லாவற்றிலும் வெற்றியாக இருக்கும். திடமான பணவரவு உண்டாகும். உறவினர்களுக்கிடையே வலிமையான பிணைப்பு உண்டாகும். யாருக்கும் தெரியாதவற்றைக் கூட நீங்கள் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். இன்று சிறப்பான நாள். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் நாள். மனம் ஒருங்கிணைந்து செயல்படுவீர்கள். தெளிவான முடிவு எடுக்கும் நாளாக இந்த நாள் உள்ளது. உத்தியோகம் ஈதியாக பொறுமை காத்து, சில அற்புதமான பலன்களை எதிர்பார்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்