Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Meenam : மீன ராசிக்கு கார்த்திகை மாதம் அமோகம் தான்......!

Manoj Krishnamoorthi November 12, 2022 & 18:15 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Meenam : மீன ராசிக்கு கார்த்திகை மாதம் அமோகம் தான்......!Representative Image.

மீன ராசிக்காரரே 2022 கார்த்திகை மாதத்தில் ஜென்மத்தில் குரு வக்கிர நிவர்த்தியாகி உள்ளது. மேலும் 2 இல் இராகு, 3 இல் செவ்வாய் வக்கிரம், 8 இல் கேது, 11 இல் சனி சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 9 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை கார்த்திகை  மாதம் 17  தேதி அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி 10 ஆம் வீட்டில்  பெயர்ச்சி செய்கிறது. இந்த கிரக நிலையால் ராசியில் பிறந்தவர்களுக்கு  கார்த்திகை மாதம் என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறியலாம்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- மீனம் (Karthigai Matha Rasi Palan 2022 Meenam In Tamil)

Karthigai Matha Rasi Palan 2022 Meenam : மீன ராசிக்கு கார்த்திகை மாதம் அமோகம் தான்......!Representative Image

மீனம் 

பொது பலன்:

உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரம் நிவர்த்தியாகி சாதகமான பலன் அளிப்பதால் சிறப்பான மாதமாக அமையும். போதுமான அளவு பணப்புழக்கம் வரும். ஆனால் உடல்நலத்தில் கவனம் தேவை. 

குடும்ப  வாழ்க்கை:

குருவின் பார்வை 7 ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண மந்தம் உண்டாகும். இல்லற வாழ்வில் இருண்ட பிரச்சனை சரியாகும். புதிய மனிதரின் நட்பு கிடைக்கும். 2 இல் இருக்கும் இராகு, மற்றவர்களின் மூலம் குடும்பத்தில் சச்சரவு உருவாகலாம். 

தொழில்: 

உங்கள் 10 வீட்டின் அதிபதி குரு ஜென்மத்தில் இருப்பது தொழிலிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும். குரு வக்கிர நிவர்த்தியாக இருப்பதால் நல்ல திட்டங்கள் நன்மை அளிக்கும். பணியில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.  ஆனால் தொழிலில் பொறுமையாக இருந்தால் ஆதாயம் உண்டு. 

கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.  ஆடம்பர செலவு உருவாகலாம், பணத்தை முதலீடு செய்வதை நிதானம் தேவை.  சிலர் புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. 

உடல்நலம்:

8 இல் கேது இருப்பதால் உடல்நலத்தில் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதை அமைதியாக வைக்க நினைக்கவும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 20,  21, 22  

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்