Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இத்தன நாளா எதுக்கு காத்திருந்திங்களோ அது தேடி வரப்போகுது..! ஜாலியோ ஜாலி… மே 22, 2022 இன்றைய ராசிபலன்!

Nandhinipriya Ganeshan May 21, 2022 & 19:50 [IST]
Nalaya Rasi Palan: இத்தன நாளா எதுக்கு காத்திருந்திங்களோ அது தேடி வரப்போகுது..! ஜாலியோ ஜாலி… மே 22, 2022 இன்றைய ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free 

மேஷம் | Aries 2022 Horoscope

உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு, இதனால் உங்களுடைய வங்கியிருப்பு அதிகரிக்கும். மனைவி அல்லது காதலியுடன் இன்று வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு. இதனால் இருவருக்கு இடையே காதல், அன்பு பலப்படும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று அருமையாக இருப்பீர்கள். காமெடியாக என்ற பேரில் மனைவியின் மனதை காயப்படுத்தாதீர்கள். சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். உங்களுடன் வேளை செய்பவர்களுக்கு அதிகம் சம்பளம் தருகிறார்கள் என்று அவரசப்பட்டு உங்க வேலையை கோட்டை விட்டுறாதீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும். 

ரிஷபம் | Taurus 2022 Horoscope

சூரிய பகவான் உங்கள் ராசியிலேயே இருப்பார். இன்று பையில் இருக்கும் பணத்தை எடுத்து செலவு செய்வதில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மதுவின் பக்கம் சென்று விடாதீர்கள். உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை மட்டும் கையாள வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடம் மாறுதல் இப்போது கிடைக்கும். சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வாய்ப்பு உள்ளது. எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்குதான். நீண்ட நாளாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிர்ப்புகள் விலகும். 

மிதுனம் | Gemini 2022 Horoscope

எல்லா எதிர்ப்புகளையும் புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் மிதுன ராசிக்காரகளே.. இன்று பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். அனாவசிய பேச்சை குறைத்து கொள்வது நல்லது. தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். புதிய தொழில் செய்ய உதவிகள் தேடி வரும். இவ்வளவு நாளாக வீணாக கிடந்த நிலம் நல்ல விலைக்கு போகும். இதுவரை தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தை கைகூடும் நாள். ஒரு சிலருக்கு காதல் மனைவியையே கறம் பிடிக்கும் வாய்ப்பு. அநாவசியமாக தெரியாதவர்களிடன் பேச வேண்டாம். மற்றவர்களுக்கு உதவியை வாரி வழங்குவீர்கள். இதனால், உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 

கடகம் | Cancer 2022 Horoscope

தொழில் உத்தியோகம் பொறுத்துவரை பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். வருங்காலத்தில் பணக்காரராக இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்தே பணத்தை மிச்சப்படுத்த ஆரம்பிக்கணும். உங்களுடைய வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணிச்சுமையால் செம சோர்வில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைக்கும். ஆனால், வீட்டில் வேலை அதிகமாகும். உங்களுடைய துணைக்கு உங்களின் மீது காதல், பாசம் அதிகரிக்கும். அவர்கள் உங்கள் மீது மிகுந்த பாசத்தை காட்டுவார். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். 

சிம்மம் | Leo 2022 Horoscope

வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நண்பர்களுடன் இணைந்து பல சவால்களை முறியடித்து நல்ல லாபம் அடைவீர்கள். உங்கள் பயத்தை போக்க வேண்டிய நாள். சிலர் தங்களுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். உங்களுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டிய நேரமும் இது தான். மற்றவர்களின் மனதை புண்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருக்கும்போது, பல எதிர்மறையான எண்ணங்கள் மனதில் வந்து போகும். எனவே, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். சினிமாவிற்கு செல்லலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இடையே அன்பும், பாசமும், புரிதல்களும் அதிகரிக்கும் நாள். 

கன்னி | Virgo 2022 Horoscope

கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. அதாவது இது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் காயம். எனவே, மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். ஏனெனில், பணத்தை இழக்க நேரிடும். மற்றவர்களை புத்திசாலித்தனமாக சமாதானப்படுத்தும் திறமையால், வரக் கூடிய பிரச்சனைகள் தீரும். உங்கள் காதலனையோ அல்லது காதலியையோ சந்திக்க நேரம் கிடைக்கும். திருமணமானவர்கள் தேவையில்லாத காரணத்தால் சில சலசலப்பு ஏற்படும். செலவுகள் செய்வதில் அதிக கவனம் தேவை.

துலாம் | Libra 2022 Horoscope

பணம் தொடர்பான விஷயத்தில் உங்கள் மனைவியுடன் சண்டை போடுவீர்கள். இருப்பினும், உங்கள் மனைவி தன்மையாக பேசி உங்களை அமைதி படுத்துவார். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால், மனதில் டென்ஷன் அதிகமாகும். வெளிப்புற வேலைகள் இன்று களைப்படைய செய்யும். புதிய நண்பர்களுடன் உறவு ஏற்படும் நாள். யாரிடமும் சொல்லாம் சின்ன விழாவை நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு திருப்தியை கொடுக்கும். இதனால், பல சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த தேவைகள் அனைத்தும் நிறைவடையும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் தீரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உங்கள் அன்புகுரியவரிடம் இருந்து எதிர்பாராத பரிசு கிடைப்பதால், உங்கள் மனதிலும் முகத்திலும் உற்சாகம் தாண்டவம் ஆடும். இந்த வேலையை இன்று முடித்துவிட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் ஆனால், அதை முடிக்க முடியாது. பழைய நினைவுகளுடன் உங்கள் துனையுடன் உட்கார்ந்து பேசி இன்பமாக பொழுதை கழிப்பீர்கள். ஒரு மன நிம்மதி கிடைக்கும். இன்று உடல்நலத்திலும் சூப்பர். வேலையும் சூப்பர். காதல் விவகாரமும் சூப்பர். ஆக மொத்தம் அருமையான நாள்.

தனுசு | Sagittarius 2022 Horoscope

இன்று பணம் தொடர்பான பிரச்சனைகள் உங்களை மனமுடைய செய்யலாம். சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள். நண்பர்கள், குடும்பத்தினரின் உதவி உங்களை தேடி வரும். எனவே, எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். எல்லாம் பிரச்சனைகளும் நீங்கும். புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து தொழிலை ஆரம்பிப்பது நல்லது. பணி செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் அல்லது தாயை புண்படுத்த வேண்டாம். 

மகரம் | Capricorn 2022 Horoscope

அப்பாடா என்று உட்காரும் நாள். இவ்வளவு அலையோ அலைனு அலஞ்சி, இன்று எல்லாவற்றிற்கும் ஒரு கும்பிடு போட்டு நாளை மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் செலவழிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு பல நிதி சிக்கல்களை நீக்கும். குடும்ப நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை, கண்டுக்கொள்ளாமல் இருந்தால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். நண்பர்களுடன் பொன்னான நேரத்தை செலவிடுவீர்கள். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான தூக்கத்தை எதிர்ப்பார்க்கலாம். கணவன், மனைவி இடையே சலசலப்பு இருக்கும். ஆனால், சமாளித்து அன்பு பெருகும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சூப்பரோ சூப்பர்…

கும்பம் | Aquarius 2022 Horoscope

நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். எனவே, குடும்பத்திடன் கோபத்தை காட்டிவிட வேண்டாம். இன்று சற்று சுமாரான நாளாக தான் இருக்கும். ஆனால், அமைதியோடு கையாள வேண்டும். இன்று நீங்கள் பணியிடத்திலிருந்து வீட்டுக்கு வந்து உங்களுக்கு பிடித்தமான வேலைகள் செய்வீர்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். காதலர்களிடையே அன்பு பெருகும். உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ ஷாப்பிங் செல்வீர்கள். இதனால், பர்சை எவ்வளவு பத்திரப்படித்தினாலும் கரைந்து விடும். கணவன், மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். 

மீனம் | Pisces 2022 Horoscope

தனலட்சுமி வீடு தேடி வர போகிறாள். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண தள்ளிப்போனவர்களுக்கு அவர்களே வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆஹா... பொறுமையாக இருக்க வேண்டிய நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்