Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan [11.08.2022]: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்... இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்...!!

Nandhinipriya Ganeshan August 10, 2022 & 14:30 [IST]
Tomorrow Rasi Palan [11.08.2022]: பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்... இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்...!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 12.30 - 01.30 வரை

மாலை: இல்லை

கௌரி நல்ல நேரம்:

காலை: இல்லை

மாலை: 06.30 - 07.30 வரை

ராகு: 01.30 - 03.00 வரை

குளிகை: 09.00 -10.30 வரை

எமகண்டம்: 06.00 - 07.30 வரை 

Tomorrow Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

மேஷம் - கன்னி ராசிபலன்!!

துலாம் [Thulam Tomorrow Rasi Palan]

உறவினர்கள் வழியில் திடீர் என்று நல்ல செய்தி வரும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். ஏனென்றால், பின்னாளில் அதுவே பெரிய ஆப்பாக வந்து நிற்கும். துலாம் ராசிக்காரர்கள் இன்று வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று எடுக்கும் சின்ன முயற்சிக்கூட பெரிய வெற்றியை கொடுக்கும். வெற்றி!

விருச்சிகம் [Viruchigam Tomorrow Rasi Palan]

இன்றைக்கு நீங்க எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். இதனால், கவலையோடு காணப்படுவீர்கள். எந்த செயலில் இறங்கினாலும் தள்ளிப்போடாமல் அதை அப்பவே முடித்துவிடுவது நல்லது. குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல. உங்க துணையுடன் வீண் விவாதங்களை தடுக்க, எதை பேசுவதாக இருந்தாலும் கவனத்தோடு பேசுவது நல்லது. சிலருக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உரிய நேரத்தில் சாப்பிட முயற்சியுங்கள். கவலை!

தனுசு [Dhanushu Tomorrow Rasi Palan]

உடல் ஆரோக்கியோத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்க ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும் நாள். விரும்பியதை செய்ய உங்க பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகளை கொடுக்கும். எனவே, நம்பிக்கையோடு நாளை தொடங்குங்கள். ஆனால், ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களால் பிரச்சனை ஏற்படலாம். நீங்க நிதானமாக செயல்படுவதன் மூலம் பெரிய சண்டையை தடுக்கலாம். நம்பிக்கை!

மகரம் [Magaram Tomorrow Rasi Palan]

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும் நாள். தொழில் சற்று மந்தமாக காணப்படும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆலோசிப்பதே மெய் என்பதிற்கேற்ப யாராவது உங்க குடும்பத்தினரை பற்றி எதாவது கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். அப்படி சந்தேகம் இருப்பின் அவர்களிடமே சென்று கேட்டுவிடுங்கள். இதனால், குடும்பத்தில் சிக்கல் வராது. கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் கவனம் தேவை. மகிழ்ச்சி!

கும்பம் [Kumbam Tomorrow Rasi Palan]

அதிகாலையிலேயே மகிழ்ச்சிகரமான செய்தி வீடு தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்ப்பாராத வகையில் உதவி கிடைக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வேலை தொடங்குவதற்கு முன் அனுபவம் வாய்தவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், எடுக்கும் முக்கிய முடிவுகள் பயனளிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆனந்தம்!

மீனம் [Meenam Tomorrow Rasi Palan]

இன்றைய தினம் ஒருசிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். இதனால், கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். இன்றுவரை நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுக்க இது நல்ல நாள் அல்ல. பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். லாபம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்