Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan [11.08.2022]: இந்த ராசியினருக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்.. கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது...!!

Nandhinipriya Ganeshan August 10, 2022 & 14:15 [IST]
Nalaya Rasi Palan [11.08.2022]: இந்த ராசியினருக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்.. கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது...!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 12.30 - 01.30 வரை

மாலை: இல்லை

கௌரி நல்ல நேரம்:

காலை: இல்லை

மாலை: 06.30 - 07.30 வரை

ராகு: 01.30 - 03.00 வரை

குளிகை: 09.00 -10.30 வரை

எமகண்டம்: 06.00 - 07.30 வரை 

நாளைய ராசிபலன் [12.08.2022, வெள்ளிக்கிழமை]

Nalaya Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

மேஷம் [Mesham Tomorrow Rasi Palan]

மேஷ ராசி நேயர்களே, நீங்க செய்யும் அனைத்தும் காரியங்களும் நல்லப்படியாக முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். தொழிலில் லாபம் தரும் நாளாக இருக்கும். உங்க மீது பாசம் வைத்திருப்பவர்களிடம் ஜாலியாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு அவர்களை காயப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பரிசும், பாராட்டும் காத்திருக்கிறது. ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். இருப்பினும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். அதிர்ஷ்டம்!

ரிஷபம் [Rishabam Tomorrow Rasi Palan]

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, விட்டு கொடுத்து போவது நல்லது. இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடுப்பதன் மூலம் ஆனந்தம் காணும் ரிஷப ராசிக்காரர்களே இன்றைய தினம் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். உங்கள் மீது அன்பாக இருப்பவர்களை தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும். எந்த செயல்களிலும் பொறுமையான் அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். கவனம்!

மிதுனம் [Midhunam Tomorrow Rasi Palan]

மிதுன ராசிக்காரர்களே! இன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம என்பதால், தேவையற்ற பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர் உங்களிடம் வேணுமென்றே சண்டை இழுப்பார்கள். அவர்களிடம் புத்திசாலிதனமாக பேசுகிறேன் என்று ஏடாகூடாமாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதை விட, பேசாமல் இருப்பதே உத்தமம். அதேப்போல், இன்று கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். கணவன்-மனைவி உறவில் அன்பும், அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். கவனம்!

கடகம் [Kadagam Tomorrow Rasi Palan]

இன்றைய தினம் பிள்ளைகள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். நீங்க முதலீடு செய்த இடத்தில் லாபம் அதிகரிக்கும் நாள். உங்களுக்கு சாதகமான நாள். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தை உணர்வீர்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இன்று உற்சாகத்துடன் பணியை மேற்கொள்வீர்கள். இது நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் பாட்னர்களை அனுசரித்து போவது நல்லது. சுபம்!

சிம்மம் [Simmam Tomorrow Rasi Palan]

உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். அதேப்போல், பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசித்து பேசவேண்டிய நாள். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று இன்று உணர்ந்துக்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிதானம்!

கன்னி [Kanni Tomorrow Rasi Palan]

உங்களுடைய முயற்சிகள் தடைகளை சந்திப்பீர்கள். எனவே, நிதானமாக செயல்களை கையாள வேண்டும். எதிலும் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் பணிசுமை காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதமாக அமையும். இன்னைய தினம் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். ஒருசிலருக்கு பொன் பொருள் வாங்கும் உண்டு. தொழில் முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவி இடையே தேவையற்ற விஷயங்களுக்கு கருத்து வேறுபாடு எழலாம். எனவே, அனுசரித்து நடப்பது வீண் பிரச்சனைகளை தடுக்கும். தடை!

துலாம் - மீனம் ராசிபலன்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்