Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 15 ஆம் நாளுக்கான [28 ஏப்ரல் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பணியிடத்தில் சகஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினரால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். நெருங்கிய உறவினர்களால் ஆதாயம் உண்டு. விலங்குகளால் வில்லங்கம் வரும், கவனம் தேவை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

காரிய தடை விலகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். விருப்பமான இடத்திற்கு செல்ல வாய்ப்புக்கு கிடைக்கும். எதிர்பாலினத்தவரால் அதிக நன்மை உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம். மாணவர்களுக்கு சிறப்பான நாள். நீண்ட நாட்களாக பேச நினைத்த உங்களை தேடி வந்து பேசுவார். குடும்பத்தில் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பாராட்டு உண்டு. தனவரவு அமோகமாக இருக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாகன பயணத்தின்போது சற்று நிதானம் வேண்டும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எந்த காரியத்திலும் துணிந்து இறங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணியிடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிகள் கைக்கூடும். கற்பித்தல் பணியில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டு. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது கவனம் தேவை. உதவி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சிலருக்கு பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி உண்டாகும். கடன் வாங்கவும் வாய்ப்புண்டு. பெயர் தெரியாதவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை வரலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடை ஏற்படும். சகபணியாளர்களிடம் அனுசரனையான பேச்சு அவசியம். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவியில் இருப்பவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். திடீர் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு உண்டான பரிசு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிலருக்கு நவீன கருவிகள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிரியாக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். புதிய நபரால் குடும்பத்தில் சின்ன பிரச்சனை தலைதூக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உடனிப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களை தள்ளிப்போடுவதை தவிர்க்கவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணியின் போது கவனம் தேவை. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பயணத்தின்போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய வாடிக்கையாளரிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் எரிச்சலூட்டும் விதமாக சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். நண்பர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும். பிள்ளைகளால் செலவுகள் வரும். ஒரு சிலர் குடும்ப சூழலை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தவறிபோன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர்களிடம் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து விற்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை எழும். ஒரு சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடன்பிறந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் இழுபறியான சரக்குகளை விற்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உதவிக்கேட்டு வருவார்கள். பணியிடத்தில் சாதமான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டும் வார்த்தையில் பொறுமை வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

நீங்க எதுபேசினாலும் அது பிரச்சனையில தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதில் இருந்த பாரம் குறையும் நாள். குடும்பத்தின் உங்க ஆசையை நிறைவேற்றி வைப்பர். நீண்ட நாள் கழித்து துணையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. பெண்களால் ஆதாயம் உண்டு. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சுமை குறையும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்துமோதல் விலகும். கனவுகள் நிறைவேறும் நாள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்