Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - சனிக்கிழமை | Tomorrow Rasi Palan in Tamil | 01.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
நாளைய ராசிபலன் - சனிக்கிழமை | Tomorrow Rasi Palan in Tamil | 01.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 16 ஆம் நாளுக்கான [01 ஜூலை 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி, சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வீர்கள். சில காரியங்கள் நிறைவேறுவதில் முட்டிமோத வேண்டிய சூழல் இருக்கும். பணிநிமித்தமான பயணம் காணப்படும். நல்ல பணவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புது பாட்னர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புத்திசாலித்தனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். எந்த காரியத்திலும் துணிவுடன் செயல்படுவீர்கள். சகஊழியர்களிடம் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். முக்கிய பணிகளில் கவனம் தேவைப்படும் நாள். பழைய விவகாரம் தம்பதிக்களுக்கு இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எந்த காரியத்திலும் நம்பிக்கையோடு செய்தால் பலன் உண்டு. பணியிடத்தில் கடின உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம், பாராட்டு கிடைக்கும். துணையிடம் அகந்தை போக்கை தவிர்க்கவும். செலவுகள் அதிகமாக காணப்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. தந்தையின் உடல்நலத்திற்கு செலவு செய்ய நேரிடும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியமும் உறுதியும் உங்களுடைய வளர்ச்சிக்கு வழிகாட்டும். கணவன், மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். திறமை பாராட்டப்படும். மனைவியின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். நீண்ட நாட்களாக இழுத்த முக்கிய பணி முடிவடையும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டு. சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உருவாகும். துணையிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பிடித்தவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். சிலருக்கு பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. புதிய நபர்களின் சந்திப்பு ஒருவிதமான மகிழ்ச்சியை தரும். தொலைபேசி வழியில் நற்செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். இரவு நேர பிராயணங்களை தவிர்க்கவும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சவால்கள் நிறைந்த நாள். சாதகமான பலன்களை அடைய அதிக முயற்சி தேவை. பணியிடத்தில் கொடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்காமல் போகலாம். உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நிதிநிலைமை சுமாராக இருக்கும். அனாவசிய செலவு வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரலாம். சுகவீனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அதிர்ஷ்டகரமான நாள். எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துவிடுவீர்கள். காதலர்களுக்குள் பழைய விஷயத்தால் வாக்குவாதம் வரலாம். பொறுமையாக இருக்கவும். எதிர்பாரா பணவரவு பல நிதி சிக்கல்களை போக்கும். புதிய முதலீடு செய்ய உகந்த நாள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வது சிறந்தது. கடின நேரத்தில் சகபணியாளர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் வீட்டிற்கு செல்வீர்கள். துணையுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அன்பு அதிகரிக்கும். சிறியளவில் கடன் வாங்குவீர்கள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சுமாரான நாள். எந்த காரியத்திலும் வேகத்தை தவிர்க்க வேண்டும். எதிர்பாலினத்தவரால் சின்ன வாக்குவாதம் ஏற்படும். பணியிடத்தில் பணிகளில் கவனம் செலுத்த செயலாற்றவும். புதிய நபர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். வாகன பயணத்தின்போது பொறுமை முக்கியம். வரவு செலவு இரண்டும் சமமாக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

யாரிடம் பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் பொறுமை வேண்டும். முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். சகஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். துணையிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். பண இழப்புக்கு ஏற்படலாம். நீர்நிலை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உதவி எதிர்பாராமல் கிடைக்கும். முக்கிய காரியங்களில் தடைகளை சந்திக்க நேரலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் மற்றவர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் புது பாட்னர் கிடைக்க வாய்ப்புண்டு. குழந்தைகளால் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்