மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாளுக்கான [05 ஆகஸ்ட் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 07.45 - 08.45 மணி வரை
மாலை: 04.45 – 05.45 மணி வரை
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் அலட்சியமின்றி செயல்பட வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பொறுமையாக நடந்து கொள்ளவும். எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்கவும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
எதிர்பாராத சிலருடன் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணியில் மேன்மை ஏற்படும். மனதில் புது தன்னம்பிக்கை தோன்றும். பெற்றோர்களின் விருப்பதை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை தெரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். தனவராவால் நெருக்கடி குறையும். சாதுர்யமான பேச்சுக்களால் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.
மனதளவில் தெளிவு ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். புது நபர்களின் நட்பால் நெகிழ்ச்சி உண்டாகும். கோவில்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பாராதஹ் உதவிகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
நிதி பற்றாக்குறையால் கடன் அதிகரிக்கும். மற்றவர்களின் பேச்சுக்கள் வருத்தத்தை ஏற்படுத்தும். கர்வத்துடன் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே அனுசரித்து செல்லவும். புது நபர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.
சுப காரிய எண்ணங்கள் கைகூடும். எந்த செயலையும் திட்டமிட்ட படி செயல்படுத்துவீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு குறையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். கடினமான காரியத்தை எளிதாக முடிப்பீர்கள்.
உயர் அதிகரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் லாபம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் முன்னேற்றமான சூழலை உண்டாகும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். யூகத்தால் மாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் ஏற்படும். அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அனுபவம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல் படுவார்கள். உழைப்புக்கு உண்டான பலன் கிடைக்கும்.
மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். இழுபறியான செயல்கள் நடந்து முடியும். புது வாகனங்களை வாங்கும் அமைப்பு ஏற்படும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எளிமையான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். செலவுகளை குறைப்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் மேம்படும்.
போட்டிகளை சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். தாமதமான பணிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். பிறருக்கு கருத்து கூறுவதை தவிர்க்கவும். மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் வேண்டும். அக்கம் - பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் அளவுடன் இருப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…