Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சண்டையால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
சண்டையால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 21 ஆம் நாளுக்கான [06 ஜூலை 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.00 வரை

மாலை: இல்லை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சண்டையால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. வியாபாரத்திலும் வருமானம் நல்ல முறையில் இருக்கும். நீங்கள் செய்யும் ஒருசில காரியங்கள் மற்றவர்களுக்கு பேருதவியாக அமையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். முக்கிய காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். எதை பேசினாலும் கவனமாக பேசவும். தொழில் மந்தமாக தான் இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

கடின உழைப்பிற்கு தக்க பரிசு கிடைக்கும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பு. விருப்பங்கள் நிறைவேறும் நாள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், ஆனால் லாபம் சுமாராக தான் இருக்கும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கும். எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். துணையுடன் பேசும்போது தேவையில்லாத வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

துலாம் | Nalaya Rasi Palan Thulam

துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் சிரமம் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு கிடைக்கப் பெறும், இதனால் சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். சிலருக்கு பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

தொழிலில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் புது திருப்பம் ஏற்படும் நாள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்துடன் செயல்படவும். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் வாக்குவாதம் ஏற்படும். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட இடத்திற்கு சென்றுவருவீர்கள். சுமாராக இருந்த தொழிலில் திடீர் லாபம் அதிகரிக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். பணவரவு தாராளமாகவே இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சுகவீனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டு தொழிலில் லாபம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்